செய்திகள் :

பிரதமர் மோடியுடன் சி.பி. ராதாகிருஷ்ணன் சந்திப்பு!

post image

தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

நாட்டின் 14-ஆவது குடியரசு துணைத் தலைவரான ஜகதீப் தன்கா் ராஜிநாமா செய்ததை அடுத்து, புதிய குடியரசு துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வருகின்ற செப். 9 ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாஜக ஆட்சிமன்றக் குழுக் கூட்டத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக தமிழகத்தை சேர்ந்த மகாராஷ்டிர ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டார்.

இந்த நிலையில், மும்பையில் இருந்து இன்று பிற்பகல் தில்லி வந்தடைந்த சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு பாஜக அமைச்சர்கள் விமான நிலையத்தில் வரவேற்பு அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடியை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து சி.பி. ராதாகிருஷ்ணன் வாழ்த்து பெற்றார்.

வேட்புமனு தாக்கல் செய்ய ஆகஸ்ட் 21 கடைசி நாளாகும். ஆகையால், ஓரிரு நாளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் சி.பி. ராதாகிருஷ்ணன் வேட்புமனு தாக்கல் செய்வார்.

இந்தியா கூட்டணி சார்பில் குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கு வேட்பாளர் நிறுத்தப்பட்டால், செப்டம்பர் 9 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் வாக்குப்பதிவு நடைபெறும்.

Vice Presidential candidate C.P. Radhakrishnan met and congratulated Prime Minister Narendra Modi in Delhi.

இதையும் படிக்க : இந்தியா கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் திருச்சி சிவா?

இந்தியாவுக்கு அஞ்சி பாகிஸ்தான் போர்க்கப்பல்கள் இடமாற்றம்!

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, இந்தியாவுக்கு பயந்து பாகிஸ்தான் போர்க்கப்பல்கள் இடமாற்றம் செய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, இந்தியாவின் தாக்குதலில் இருந்து... மேலும் பார்க்க

இந்தூரில் சுவர் இடிந்து 3 தொழிலாளர்கள் பலி, ஒருவர் காயம்!

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் கனமழையின்போது கட்டுமானத்தில் இருந்த சுவர் இடிந்து விழுந்ததில் மூன்று தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.இந்தூரில் பெய்துவரும் கனமழையின் காரணமாகக் கட்டுமானப் பணியிலிருந்த 13 ... மேலும் பார்க்க

ஜனநாயகத்தை நசுக்கும் முயற்சியை எதிர்ப்போம்! கார்கே

ஜனநாயகத்தை நசுக்கும் எந்தவொரு முயற்சியையும் இந்தியா கூட்டணி எதிர்க்கும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.கடந்த மக்களவைத் தோ்தல் மற்றும் பல்வேறு மாநில பேரவைத் த... மேலும் பார்க்க

ரூ.10,000-க்கு நிறைவான அம்சங்களுடன் ஸ்மார்ட்போன்! அறிமுகமானது இன்ஃபினிக்ஸ் ஹாட் 60 ஐ!

இன்ஃபினிக்ஸ் ஹாட் 60 ஐ ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட் விலையில் அதிக பேட்டரி திறனுடனும், திரை தரத்துடனும் வருவதால், பயனர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெறும் என எதிர்பார்... மேலும் பார்க்க

ஜனநாயகத்தின் பாதுகாவலர்! பிகாரில் ராகுலுக்கு உற்சாக வரவேற்பு!

பிகாரில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் நடைபெறும் வாக்குரிமை பேரணிக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.பிகார் மாநிலம், ரோத்தாஸ் மாவட்டம், சசாரம் நகரில் ராகுல் காந்தி ... மேலும் பார்க்க

தேர்தல் ஆணையம் சொன்னது பொய்; பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருக்கிறேன் - அகிலேஷ் யாதவ்

வாக்குத் திருட்டு குற்றச்சாட்டில் யாரும் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யவில்லை என்று தேர்தல் ஆணையம் சொன்ன நிலையில், தான் செய்த பிரமாணப் பத்திரத்தின் நகலை அகிலேஷ் யாதவ் வெளியிட்டுள்ளார்.வாக்குத் திருட்... மேலும் பார்க்க