கீழே தவறினாலும் உடையாத ஸ்மார்ட்போன்! அடுத்த மாதம் வெளியாகிறது ஓப்போ எஃப் 31!
இந்தூரில் சுவர் இடிந்து 3 தொழிலாளர்கள் பலி, ஒருவர் காயம்!
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் கனமழையின்போது கட்டுமானத்தில் இருந்த சுவர் இடிந்து விழுந்ததில் மூன்று தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.
இந்தூரில் பெய்துவரும் கனமழையின் காரணமாகக் கட்டுமானப் பணியிலிருந்த 13 அடி உயர சிமென்ட் சுவர் இடிந்து விழுந்தது. இதில் கௌதம் ரத்தோர் (22), ராமேஷ்வர் பவார் (48) திட்டு ரத்தோர் (35) ஆகியோர் இடிபாடுகளில் புதையுண்ட தாக ராஜேந்திர நகர் காவல் நிலைய பொறுப்பாளர் நீரஜ் பிரத்ரே தெரிவித்தார். மேலும், அவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன.
ஒரு தனியார் காலணியில் தொழிலாளர்கள் 2 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நிலத்தடி நீர் தொட்டியைக் கட்டிக்கொண்டிருந்தனர். இந்த சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.