`50 வருஷமா லட்சக்கணக்குல வீணாக்கிட்டோம்; அதனால..' கூலி ரிலீஸ் நாளில் ரஜினி ரசிகர...
டிரம்மில் அழுகிய உடல்: மனைவி, குழந்தைகள் மாயம்; நடந்தது என்ன?
ராஜஸ்தானில் அல்வாரில் டிரம்மில் அழுகிய ஆணின் சடலம் கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் திஜாரா மாவட்டத்தில் உள்ள ஆதர்ஷ் காலனியில் நடைபெற்றது. வீட்டு உரிமையாளர், அவரின் மகள் ஏதோ வேலைக்காக மொட்டை மாடிக்குச் சென்றுள்ளனர். அங்குத் துர்நாற்றம் ஏற்படவே போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார்.
சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் வீட்டைத் திறந்துபார்த்தனர். அப்போது வீட்டின் மேல்பகுதியிலிருந்த டிரம்முக்குள் ஹான்ஸ்ராமின் உடல் சிறைந்த நிலையில் இருந்ததைக் கண்டு போலீஸார் அதிர்ச்சியடைந்தனர்.
ஹான்ஸ்ராமின் கழுத்து பகுதி கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டும், உடல் சிதைவதைத் தடுப்பதற்காக டிரம்ப் முழுவதும் உப்பு போடப்பட்டு இருந்தது. ஹான்ஸ்ராமின் உடலை மீட்ட போலீஸார் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.
விசாரணையில் ஹான்ஸ்ராமின் மனைவி, மூன்று குழந்தைகள் கடந்த சில நாள்களாகக் காணாமல் போயுள்ளனர். அதேசமயம் வீட்டு உரிமையாளரின் மகனும் மாயமாகியுள்ளார்.
ஹான்ஸ்ராமின் உடல் டிரம்மில் எவ்வளவு நாள்களாக உள்ளது.. கொலைக்கான காரணம் என்ன என்பதைப் பற்றி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
Man's Body Found Rotting In A Drum In Rajasthan, Wife And Children Missing