செய்திகள் :

கார்த்தியின் வா வாத்தியார் என்ன ஆனது?

post image

நடிகர் கார்த்தி நடிப்பில் உருவான வா வாத்தியார் திரைப்படத்தின் வெளியீடு தள்ளிச்சென்றபடியே இருக்கிறது.

கார்த்தி நடிப்பில் கடைசியாக வெளியான மெய்யழகன் திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வெற்றிப் படமானது.

இதனைத் தொடர்ந்து, ‘சூது கவ்வும்’, ‘காதலும் கடந்து போகும்’ உள்ளிட்ட படங்களின் இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் ’வா வாத்தியார்’ திரைப்படத்தில் கார்த்தி நடித்து முடித்தார்.

இப்படத்தில் நாயகியாக கிருத்தி ஷெட்டியும், வில்லனாக சத்யராஜும் முக்கியக் கதாபாத்திரத்தில் ராஜ்கிரணும் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

வா வாத்தியாரின் படப்பிடிப்பு கடந்த ஆண்டே நிறைவடைந்த நிலையில், இன்னும் இப்படம் திரைக்கு வராமல் இருக்கிறது.

காரணம், படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ கிரீன் கங்குவா திரைப்படத்தின் தோல்வியால் பல சிக்கல்களைச் சந்தித்தது. குறிப்பாக, கங்குவா விநியோகஸ்தர்கள் ஸ்டூடியோ கிரீன் படத்தை வாங்க தயக்கம் காட்டுவதாகக் கூறப்படுகிறது.

வா வாத்தியாரின் வெளியீடு தொடர்ந்து தள்ளிச்சென்றபடி இருக்க, இதுவும் ஒரு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது. நீண்ட காலம் கழித்து நலன் குமாரசாமி இயக்கிய திரைப்படம் திரைக்கு வராமல் இருப்பது ரசிகர்களிடம் ஏமாற்றத்தையும் அளித்துள்ளது.

இதையும் படிக்க: பாபா - கூலி! இதை கவனித்தீர்களா?

report suggest that postponed reason of actor karthi's vaa vaathiyaar movie

மன அழுத்தமா? இந்த 10 வழிகளை முயற்சி செய்யுங்கள்!

மன அழுத்தம்.. குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் இந்த காலத்தில் இருக்கும் ஒரு பிரச்னை. மாறிவரும் வாழ்க்கைச் சூழல், நகரமயமாக்கல், தனிக் குடும்பச் சூழ்நிலை, உடல் பிரச்னைகள், உறவுகள் என மன அழு... மேலும் பார்க்க

பாபா - கூலி! இதை கவனித்தீர்களா?

நடிகர் ரஜினிகாந்த்தின் பாபா மற்றும் கூலி திரைப்படங்களின் வெளியீட்டுத் தேதி சில ஒற்றுமைகளைக் கொண்டுள்ளது.நடிகர் ரஜினிகாந்த் நடித்த திரைப்படங்களில் பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியது அண்மையில் வெளியான... மேலும் பார்க்க

தமிழகத்தில் ரூ. 100 கோடி வசூலித்த கூலி!

கூலி திரைப்படத்தின் தமிழக வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.படத்திற்கான புரமோஷன்கள் மற்றும் எதிர்பார்ப்பு உச்சமடைய பிரம்மாண்டமாக கடந்த வியாழக்கிழமை திரையரங்குகளில் வெளியானது.ஆனால், மோசமான கதை மற்று... மேலும் பார்க்க

டாக்ஸிக் படத்தில் ருக்மணி வசந்த்!

நடிகை ருக்மணி வசந்த் டாக்ஸிக் திரைப்படத்தில் இணைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.நடிகர் யஷ் நடிப்பில் மலையாள இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகும் புதிய படம் ’டாக்ஸிக்’. கேஜிஎஃப் - 2 படத்தி... மேலும் பார்க்க

மம்மூட்டியின் களம் காவல் அப்டேட்!

நடிகர் மம்மூட்டி நடித்துள்ள களம் காவல் படம் குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது.’குரூப்’ படத்தின் இணை எழுத்தாளரான ஜித்தின் கே. ஜோஸ் இயக்கத்தில் நடிகர் மம்மூட்டி களம் காவல் என்கிற திரைப்படத்தில் நடித்து ம... மேலும் பார்க்க

தமிழ் சினிமாவுக்கு நிறைய சசிகுமார்கள் தேவை: முத்தையா

நடிகர் சசிகுமார் குறித்து இயக்குநர் முத்தையா நெகிழ்ச்சியாகப் பேசியுள்ளார். தமிழ் சினிமாவின் கிராம வாழ்க்கையைத் திரைப்படுத்தி கவனம் ஈர்த்த இயக்குநர்களில் ஒருவரான முத்தையா குட்டிப்புலி மூலம் சினிமாவுக்க... மேலும் பார்க்க