உக்ரைன் போருக்கு முடிவு? அமெரிக்க, ஐரோப்பிய, உக்ரைன் தலைவர்கள் இன்று நள்ளிரவில் ...
பாபா - கூலி! இதை கவனித்தீர்களா?
நடிகர் ரஜினிகாந்த்தின் பாபா மற்றும் கூலி திரைப்படங்களின் வெளியீட்டுத் தேதி சில ஒற்றுமைகளைக் கொண்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் நடித்த திரைப்படங்களில் பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியது அண்மையில் வெளியான கூலி மட்டுமல்ல, சரியாக 23 ஆண்டுகளுக்கு முன் வெளியான பாபாவும்தான்.
காரணம், பாபா திரைப்படத்தின்போது நடிகர் ரஜினிகாந்த் தன் அரசியல் வருகை குறித்து தீவிரமாக யோசித்து அதற்கென்றே ஒரு கதையைத் தயார் செய்தார்.
ஆனால், பாபா மோசமான விமர்சனங்களைப் பெற்று தோல்விப்படமானது. ஏழு மந்திரங்கள், அரசியல்வாதிகளைத் தட்டிக்கேட்கும் ரஜினி என சுவாரஸ்யமான விஷயங்கள் இருந்தும் ரசிகர்களால் கதையுடன் ஒன்ற முடியவில்லை.
சரி, இப்போது ஏன் பாபா கதையைப் பேச வேண்டும்? ஒரு காரணம் இருக்கிறது. பாபா திரைப்படம் வெளியான தேதி ஆக.15, 2002. சரியாக, ரஜினிகாந்த் சினிமாவில் அறிமுகமாகி 27-வது ஆண்டில் பாபா திரைக்கு வருகிறது.
தற்போது, ரஜினி திரைத்துறையில் 50 ஆம் ஆண்டை நிறைவு செய்யும் தருணத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்த கூலி திரைப்படம் ஆக.14 ஆம் தேதி திரைக்கு வந்தது.
நடிகர் ரஜினிகாந்துக்கு ஆன்மீக நம்பிக்கை இருப்பதால் பாபா திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி தோல்விக்குக் காரணமாக இருக்கலாம் என நினைத்தாராம். அதனால், அதன்பின் உருவான எந்த ரஜினிகாந்த் படங்களும் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வரமால் இருந்தது. (குசேலனில் சிறப்பு தோற்றமாக நடித்திருந்தார். ஆக.1 வெளியான அப்படமும் தோல்வியையே அடைந்தது)
இதையும் படிக்க: தகுதிக்கு மீறி கொண்டாடப்படும் இயக்குநர்... விமர்சனத்திற்கு ஆளாகும் லோகேஷ் கனகராஜ்!
இந்த செண்டிமெண்ட்டை ஆகஸ்ட் 10, 2023 ஆம் ஆண்டு வெளியான ஜெயிலர் திரைப்படம் உடைத்தது. தற்போது, பாபா வெளியாகி 23 ஆண்டுகள் கழித்து கூலி திரைப்படத்தை ஆக. 14 ஆம் தேதி சுதந்திர தின வெளியீடாகத் திரைக்குக் கொண்டு வந்தனர்.
ஆனால், மீண்டும் பாபாவை நினைவுபடுத்தும் விதமாக ரஜினிக்கு கூலியும் தோல்விப்படமாக அமைந்துவிட்டது. வணிக ரீதியாக இப்படம் தப்பித்தாலும் லாஜிக் விஷயங்களில் பாபா சந்தித்த பிரச்னைகளையே சந்தித்து ரசிகர்களால் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிக்க: தமிழகத்தில் ரூ. 100 கோடி வசூலித்த கூலி!