செய்திகள் :

நைஜீரியாவில் படகு கவிழ்ந்து விபத்து: 40 பேர் பலி!

post image

மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நைஜீரியாவில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 40 பேர் பலியாகியுள்ளனர்.

சொஹொடா மாகாணம் கடா கிராமத்தைச் சேர்ந்த 50 பேர் நேற்று பிற்பகல் ஆற்றில் படகு மூலம் கொரொன்யா பகுதியில் உள்ள சந்தைக்குச் சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் 10 பேரை உயிருடன் மீட்டனர். மேலும் 40 பேர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் அவர்களைத் தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

படகு கவிழ்ந்து 24 மணி நேரம் ஆன நிலையில் 40 பேரும் இறந்திருந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

கடந்த 2024ல் படகு கவிழ்ந்த விபத்தில் 326 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நைஜீரியாவில் படகு போக்குவரத்து அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. படகை இயக்குபவர்கள் லைப் ஜாக்கெட் போன்ற பாதுகாப்பு கவசங்களைப் பயன்படுத்தத் தவறுகின்றன, இதுவே விபத்துக்குக் காரணமாக அமைகிறது.

At least 40 people are missing after a boat capsized Sunday on a river in northwestern Nigeria, authorities said.

உக்ரைன் போருக்கு முடிவு? அமெரிக்க, ஐரோப்பிய, உக்ரைன் தலைவர்கள் இன்று நள்ளிரவில் சந்திப்பு!

உக்ரைன் போருக்கு முடிவு எட்டப்படுவது குறித்து மிக முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு இன்று(ஆக. 18) நள்ளிரவில் அமெரிக்காவில் நடைபெற உள்ளது. அமெரிக்க, உக்ரைன், ஐரோப்பிய தலைவர்கள் இன்று சந்தித்து முக்கிய ஆ... மேலும் பார்க்க

குழந்தைகள் பாலியல் வன்கொடுமை: பெண்ணுக்கு 100 ஆண்டுகள் சிறை! நடந்தது என்ன?

கலிஃபோரனியாவைச் சேர்ந்த குழந்தைகள் பராமரிப்பு மைய ஊழியர் பிரிட்னி மே லையோன் என்ற பெண்ணுக்கு 100 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் பார்க்க

உக்ரைனுக்கு நேட்டோவில் இடமில்லை! டிரம்ப் அறிவிப்பு

உக்ரைனுக்கு நேட்டோவில் இடமில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளார்.ரஷியா - உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவின் அலஸ்காவில் டிரம்பை நேரில் சந்தித்து ரஷிய அத... மேலும் பார்க்க

நேட்டோவில் இணைய முடியாது.. ஸெலன்ஸ்கிக்கு டிரம்ப் தகவல்!

உள்நாட்டு மாகாண சலுகைகளை ஏற்க உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி தொடர்ந்து மருத்து வரும் நிலையில், வாஷிங்டனில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை சந்திக்கவிருக்கிறார்.ஐரோக்கிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வோன் டேர... மேலும் பார்க்க

“குழந்தைகளுக்காக போரை நிறுத்துங்கள்”..! புதினுக்கு டிரம்ப் மனைவி உருக்கமான கடிதம்!

உக்ரைனில் போரின் கோரப்பிடியில் சிக்கியிருக்கும் குழந்தைகளின் நலனைக் கருத்தில்கொண்டு, போரை உடனடியாக நிறுத்துமாறு ரஷிய அதிபா் புதினுக்கு அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் மனைவி மெலனியா டிரம்ப் கடிதம்... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் ராணுவ ஆட்சிக்கு சதி? தலைமைத் தளபதி மறுப்பு

பாகிஸ்தானில் ஆட்சியைப் பிடிக்க ராணுவம் சதி செய்து வருவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டை அந்நாடு ராணுவ தலைமைத் தளபதி அசீம் முனீா் மறுத்துள்ளாா். அதே நேரத்தில் இந்தியாவுடன் இணைந்து பாகிஸ்தானுக்கு எதிராக ஆப்க... மேலும் பார்க்க