செய்திகள் :

உக்ரைனுக்கு நேட்டோவில் இடமில்லை! டிரம்ப் அறிவிப்பு

post image

உக்ரைனுக்கு நேட்டோவில் இடமில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளார்.

ரஷியா - உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவின் அலஸ்காவில் டிரம்பை நேரில் சந்தித்து ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் கடந்த வாரம் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை என்றும் ஆனால், முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் இரு தலைவர்களும் தெரிவித்தனர்.

இந்த நிலையில், உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கியை வெள்ளை மாளிகையில் திங்கள்கிழமை சந்திக்கும் டிரம்ப், போர் நிறுத்தம் தொடர்பாக பேசவுள்ளார்.

இந்த சந்திப்பில், ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களும் உக்ரைனுக்கான ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதனிடையே, உக்ரைன் அதிபருடனான சந்திப்புக்கு முன்னதாக, சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப், நேட்டோவில் உக்ரைனால் இணைய முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில்,

”உக்ரைன் அதிபர் நினைத்தால் ரஷியாவுடனான போரை உடனடியாக நிறுத்த முடியும். அல்லது தொடர்ந்து சண்டையிடலாம். எப்படி தொடங்கியது என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.

ஒபாமாவால் 12 ஆண்டுகளுக்கு முன்னதாக எவ்வித சண்டையும் இல்லாமல் ரஷியாவுக்கு அளிக்கப்பட்ட கிரிமியா திருப்பி அளிக்கப்படாது. நேட்டோவிலும் உக்ரைனால் இணைய முடியாது. சில விஷயங்கள் ஒருபோதும் மாறாது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

டிரம்ப்பின் இந்த பதிவால், உக்ரைன் அதிபருடனான சந்திப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டு ரஷியா தங்கள் நாட்டை ஆக்கிரமிக்கக் கூடும் எனத் தெரிவித்த ஸெலென்ஸ்கி, நேட்டோவில் இணைய முயற்சிகள் மேற்கொண்டார்.

நேட்டோவில் இணைந்தால் ரஷியாவுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் எனத் தெரிவித்த புதின், உக்ரைன் மீது போர் தொடுத்தார். மூன்று ஆண்டுகளைக் கடந்த போர் தொடர்ந்து வருகிறது.

US President Donald Trump announced on Sunday that Ukraine has no place in NATO.

இதையும் படிக்க : குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஸ்டாலினிடம் ஆதரவு கோரினார் ராஜ்நாத் சிங்!

குழந்தைகள் பாலியல் வன்கொடுமை: பெண்ணுக்கு 100 ஆண்டுகள் சிறை! நடந்தது என்ன?

கலிஃபோரனியாவைச் சேர்ந்த குழந்தைகள் பராமரிப்பு மைய ஊழியர் பிரிட்னி மே லையோன் என்ற பெண்ணுக்கு 100 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் பார்க்க

நேட்டோவில் இணைய முடியாது.. ஸெலன்ஸ்கிக்கு டிரம்ப் தகவல்!

உள்நாட்டு மாகாண சலுகைகளை ஏற்க உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி தொடர்ந்து மருத்து வரும் நிலையில், வாஷிங்டனில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை சந்திக்கவிருக்கிறார்.ஐரோக்கிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வோன் டேர... மேலும் பார்க்க

“குழந்தைகளுக்காக போரை நிறுத்துங்கள்”..! புதினுக்கு டிரம்ப் மனைவி உருக்கமான கடிதம்!

உக்ரைனில் போரின் கோரப்பிடியில் சிக்கியிருக்கும் குழந்தைகளின் நலனைக் கருத்தில்கொண்டு, போரை உடனடியாக நிறுத்துமாறு ரஷிய அதிபா் புதினுக்கு அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் மனைவி மெலனியா டிரம்ப் கடிதம்... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் ராணுவ ஆட்சிக்கு சதி? தலைமைத் தளபதி மறுப்பு

பாகிஸ்தானில் ஆட்சியைப் பிடிக்க ராணுவம் சதி செய்து வருவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டை அந்நாடு ராணுவ தலைமைத் தளபதி அசீம் முனீா் மறுத்துள்ளாா். அதே நேரத்தில் இந்தியாவுடன் இணைந்து பாகிஸ்தானுக்கு எதிராக ஆப்க... மேலும் பார்க்க

நேபாள பிரதமருடன் வெளியுறவுச் செயலா் சந்திப்பு: இருதரப்பு உறவை மேம்படுத்த ஆலோசனை!

நேபாள பிரதமா் கே.பி.சா்மா ஓலியை ஞாயிற்றுக்கிழமை சந்தித்த இந்திய வெளியுறவுத் துறை செயலா் விக்ரம் மிஸ்ரி, பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவை மேலும் மேம்படுத்தும் வழிமுறைகள் குறித்து ஆலோசித்தாா். நேபாள வெள... மேலும் பார்க்க

பிணைக் கைதிகளை விடுவிக்க இஸ்ரேலில் தீவிர போராட்டம்: 38 போ் கைது

காஸாவில் ஹமாஸ் படையிடம் உள்ள பிணைக் கைதிகளை விடுவிக்க ஒப்பந்தம் மேற்கொள்ள வலியுறுத்தி, இஸ்ரேல் முழுவதும் பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களில் 38 போ் கைது செய்யப்பட்டனா... மேலும் பார்க்க