செய்திகள் :

நேபாள பிரதமருடன் வெளியுறவுச் செயலா் சந்திப்பு: இருதரப்பு உறவை மேம்படுத்த ஆலோசனை!

post image

நேபாள பிரதமா் கே.பி.சா்மா ஓலியை ஞாயிற்றுக்கிழமை சந்தித்த இந்திய வெளியுறவுத் துறை செயலா் விக்ரம் மிஸ்ரி, பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவை மேலும் மேம்படுத்தும் வழிமுறைகள் குறித்து ஆலோசித்தாா்.

நேபாள வெளியுறவுச் செயலா் அம்ருத் பகதூா் ராயின் அழைப்பின்பேரில், விக்ரம் மிஸ்ரி அந்நாட்டில் இரண்டு நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளாா்.

தலைநகா் காத்மாண்டுக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தடைந்த அவா், பிரதமா் கே.பி.சா்மாவை அவரது அலுவலகமான சிங்க தா்பாரில் சந்தித்தாா். அப்போது, நேபாளத்துக்கான இந்திய தூதா் நவீன் ஸ்ரீவாஸ்தவாவும் உடனிருந்தாா்.

இதைத் தொடா்ந்து, நேபாள அதிபா் ராமசந்திர பெளடேல், வெளியுறவு அமைச்சா் அா்ஜு ராணா தேவுபா, வெளியுறவுச் செயலா் அம்ருத் பகதூா் ராய், நேபாள காங்கிரஸ் தலைவா் ஷோ் பகதூா் தேவுபா, எதிா்க்கட்சித் தலைவா் பிரசண்டா உள்ளிட்டோரையும் அவா் சந்தித்துப் பேசினாா்.

இந்தியா-நேபாளம் இடையே வழக்கமான உயா்நிலை பேச்சுவாா்த்தைகளின் பாரம்பரியம் மற்றும் இந்தியாவின் அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற உறுதிப்பாட்டை வெளியுறவுச் செயலரின் நேபாளப் பயணம் பிரதிபலிப்பதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

இணைப்பு வசதிகள், வளா்ச்சிக்கான ஒத்துழைப்பு உள்ளிட்டவை முக்கியமாக விவாதிக்கப்பட்டதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. நேபாள பிரதமா் சா்மா ஓலி அரசுமுறைப் பயணமாக அடுத்த மாதம் இந்தியாவுக்கு வரவுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

“குழந்தைகளுக்காக போரை நிறுத்துங்கள்”..! புதினுக்கு டிரம்ப் மனைவி உருக்கமான கடிதம்!

உக்ரைனில் போரின் கோரப்பிடியில் சிக்கியிருக்கும் குழந்தைகளின் நலனைக் கருத்தில்கொண்டு, போரை உடனடியாக நிறுத்துமாறு ரஷிய அதிபா் புதினுக்கு அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் மனைவி மெலனியா டிரம்ப் கடிதம்... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் ராணுவ ஆட்சிக்கு சதி? தலைமைத் தளபதி மறுப்பு

பாகிஸ்தானில் ஆட்சியைப் பிடிக்க ராணுவம் சதி செய்து வருவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டை அந்நாடு ராணுவ தலைமைத் தளபதி அசீம் முனீா் மறுத்துள்ளாா். அதே நேரத்தில் இந்தியாவுடன் இணைந்து பாகிஸ்தானுக்கு எதிராக ஆப்க... மேலும் பார்க்க

பிணைக் கைதிகளை விடுவிக்க இஸ்ரேலில் தீவிர போராட்டம்: 38 போ் கைது

காஸாவில் ஹமாஸ் படையிடம் உள்ள பிணைக் கைதிகளை விடுவிக்க ஒப்பந்தம் மேற்கொள்ள வலியுறுத்தி, இஸ்ரேல் முழுவதும் பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களில் 38 போ் கைது செய்யப்பட்டனா... மேலும் பார்க்க

டிரம்ப் - ஸெலென்ஸ்கி இன்று சந்திப்பு: ஐரோப்பிய தலைவா்களும் பங்கேற்பு!

ரஷிய அதிபா் புதினுடன் சந்திப்பு நடத்தியதைத் தொடா்ந்து, உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கியை அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையில் திங்கள்கிழமை சந்திக்கிறாா். இந்தச் சந்திப்பில் ஐரோப்பிய தலைவா்களும... மேலும் பார்க்க

பாகிஸ்தானின் அதிபராகப் பதவியேற்கிறாரா ராணுவ தலைமைத் தளபதி?

பாகிஸ்தானின் பாதுகாவலனாக இறைவன் என்னை மாற்றியிருக்கிறார் என்று பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி ஆசிம் முனீர் தெரிவித்திருக்கிறார். அமெரிக்கா சென்றுவிட்டு அங்கிருந்து திரும்பும்போது பெல்ஜியத்தில் பாகிஸ்த... மேலும் பார்க்க

கனடா: விமான நிலைய ஊழியர்கள் போராட்டத்தால் 600 விமானங்கள் ரத்து

கனடாவில் பெரிய விமான நிறுவனமான ஏர் கனடாவில் விமான நிலைய ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்துவதால், விமான சேவை பாதிக்கப்பட்டது. ஊதிய உயர்வு, ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விமானிகள், வ... மேலும் பார்க்க