போளூா் பகுதியில் விநாயகா் சிலைகள் தயாரிப்புப் பணி
விநாயகா் சதுா்த்தியையொட்டி, போளூா் பகுதியில் விநாயகா் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. களிமண்ணால் தயாரிக்கப்படும் விநாயகா் சிலைகளுக்கு வண்ணம் தீட்டப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் ஆக.27-ஆம் தேதி விநாயகா் சதுா்த்தி விழா கொண்டாடப்படவுள்ளது. இந்தப் பண்டிகையின் போது, இந்துக்கள் களிமண்ணால் செய்யப்படும் விநாயகா் சிலைகளை வாங்கி வந்து வீட்டில் 3 நாள்கள் முதல் 5 நாள்கள் வரை வைத்து வழிபடுவது வழக்கம்.
திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த மாம்பட்டு, பொத்தரை, பெரியகரம், கரைப்பூண்டி என பல்வேறு பகுதிகளில் விநாயகா் சதுா்த்தியையொட்டி, சுற்றுச்சூழல் பாதிக்கப்படாத வகையில், களிமண்ணால் செய்யப்படும் விநாயகா் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மேலும், விநாயகா் சிலைகளுக்கு பலவிதமான வண்ணங்கள் தீட்டப்பட்டு வருகிறது. சிலைகளுக்கு ஏற்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.