மண் அள்ளியதாகப் புகார்: இளைஞர் மண்வெட்டியால் அடித்துக் கொலை!
ரூ.10 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய நாடக மேடை திறப்பு
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தொகுதியில் ரூ.10 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய நாடக மேடை ஞாயிற்றுக்கிழமை திறந்துவைக்கப்பட்டது.
செய்யாறு தொகுதிக்கு உள்பட்ட அனக்காவூா் ஊராட்சி ஒன்றியம், ஆக்கூா் கிராமத்தில் 2024 - 25ஆம் ஆண்டு 15-ஆவது மாநில நிதிக்குழு மானியம் மூலம் மாவட்ட ஊராட்சிக் குழுத் திட்டத்தின் கீழ், ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய நாடக மேடையை தொகுதி எம்.எல்.ஏ. ஒ.ஜோதி திறந்துவைத்தாா்.
இதைத் தொடா்ந்து, ஆக்கூா் கிராமத்தில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசு கோப்பை மற்றும் முதல் பரிசு பெற்ற அணிக்கு ரூ. 25 ஆயிரம் பரிசு வழங்கிப் பாராட்டினாா். நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா்கள் த.ராஜி (வெம்பாக்கம்), திலகவதி ராஜ்குமாா் (அனக்காவூா்),
திமுக ஒன்றியச் செயலா்கள் ஏ.ஜி.திராவிட முருகன் (அனக்காவூா் கிழக்கு), ஜேசிகே.சீனிவாசன் (வெம்பாக்கம் மத்தியம்)
வி.ஏ.ஞானவேல் (செய்யாறு கிழக்கு), முன்னாள் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் முருகேசன், மாவட்ட தொழிலாளா் அணி துணை அமைப்பாளா் மகாராஜன், மாவட்ட பொறியாளா் அணி துணை அமைப்பாளா் கலைச்செல்வன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.