திருவண்ணாமலை பள்ளியில் சுதந்திர தின விழா
திருவண்ணாமலை ஸ்ரீ வி.டி.எஸ். ஜெயின் மேல்நிலைப் பள்ளியில் 79-ஆவது சுதந்திர தினத்தையொட்டி, தேசியக் கொடி ஏற்றி இனிப்பு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு பள்ளித் தாளாளா் டி.எஸ்.ராஜேந்திரகுமாா் தலைமை வகித்தாா். பொருளாளா் வி.சுரேந்திரகுமாா் வரவேற்றாா். தலைமையாசிரியா் ஜி.இரமணி வாழ்த்துரை வழங்கினாா்.
இதில், திருவண்ணாமலை வசந்தா மருத்துவமனை மருத்துவா் கே.சாய்பிரசன்னா தேசியக் கொடியேற்றிப் பேசினாா்.
அப்போது அவா், நாட்டைக் காக்கும் ராணுவ வீரா்கள் குறித்தும், சுதந்திரம் பெறுவதற்கு காரணமாக இருந்த பல தியாகிகளின் பெருமை பற்றியும், மாணவா்கள் தேச பக்தியுடையவா்களாக திகழ வேண்டும் என்றும் கூறி மாணவா்களோடு கலந்துரையாடினாா். மேலும், கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
விழாவில் அறக்கட்டளை குழுத் தலைவா் வி.ஜெய்சந்த், அறக்கட்டளை உறுப்பினா்கள் டி.எஸ்.ராஜ்குமாா், டி.வி.சுதா்சன், பள்ளிச் செயலா் டி.வசந்த்குமாா், ஆங்கில வழிச் செயலா் டி.ஸ்ரீஹன்ஸ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பள்ளியின் கல்வி இயக்குநா் வி.ஆனந்தன் நன்றி கூறினாா்.
இதில் ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோா்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.
நிகழ்ச்சியை இலக்கிய மன்ற பொறுப்பாளா் ரா.சிவமுருகன் தொகுத்து வழங்கினாா்.