மண் அள்ளியதாகப் புகார்: இளைஞர் மண்வெட்டியால் அடித்துக் கொலை!
நவீன் பட்நாயக் உடல்நிலை முன்னேற்றம்; இன்று வீடு திரும்புகிறார்
புவனேசுவரம்: ஒடிசாவின் முன்னாள் முதல்வரும், பிஜு ஜனதா தளம் கட்சித் தலைவருமான நவீன் பட்நயாக், உடல்சோா்வு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புவனேசுவரத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் நேற்று மாலை அனுமதிக்கப்பட்ட நவீன் பட்நாயக் உடல்நிலை சீராக உள்ளதாகவும் இன்று அவர் வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
நீர்ச்சத்துக் குறைபாடு காரணமாக 78 வயதான நவீன் பட்நாயக்கிற்கு சனிக்கிழமை இரவு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அவருக்கு வீட்டிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னா், ஞாயிற்றுக்கிழமை மாலை 5.15 மணியளவில் அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
நீர்ச்சத்துக் குறைபாட்டுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவரது உடல்நிலை நன்கு குணமடைந்திருப்பதாகவும், இன்று மாலை மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புவார் என்றும் கூறப்படுகிறது.
கடந்த ஜூன் மாத இறுதியில் முதுகுத்தண்டு அறுவை சிகிச்சைக்காக மும்பை சென்றிருந்த நவீன் பட்நாயக், அண்மையில்தான் ஒடிசா திரும்பினாா் என்பது குறிப்பிடத்தக்கது.