அமெரிக்க கண்காணிப்பில் இந்தியா, பாகிஸ்தான்! வெளியுறவு அமைச்சர்
பங்குச் சந்தைகள் உயர்வுடன் வணிகம்!
ஜிஎஸ்டி குறைக்கப்படும் என்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட அறிவிப்பு எதிரொலியால் வாரத்தின் முதல் நாளான இன்று பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் வணிகத்தைத் தொடங்கின.
சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்ந்து வர்த்தகமாகி வரும் நிலையில் நிஃப்டி குறியீடு 24,950 என்ற அளவில் வர்த்தகமாகி வருகிறது.
வாகன மற்றும் நுகர்வோர் பொருள்களுக்கான நிறுவனங்களின் பங்குகள் இன்று உயர்வைக் கண்டுள்ளன.
இன்று காலை 10.30 மணியளவில், பிஎஸ்இ சென்செக்ஸ், 981.99 புள்ளிகள் உயர்ந்து 81,580.99 புள்ளிகளுடனும், நிஃப்டி 50 குறியீடு 368.40 புள்ளிகள் உயர்ந்து 25,000 என்ற அளவில் வர்த்தகமாகின.
வாரத்தின் முதல் நாளான இன்று வணிகம் உயர்வுடன் தொடங்கியிருப்பதால் பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
முக்கியமாக ஹீரோ மோட்டோகார்ப், மாருதி சுசூகி இந்தியா, அசோக் லைலேண்ட், டிவிஎஸ் மோட்டார் கம்பெனி, பஜாஜ் ஆட்டோ உள்ளிட்ட வாகன உற்பத்தி நிறுவனங்களின் பங்குகள் உயர்வை சந்தித்தள்ளன.