விடியல் பயணம்: ஒவ்வொரு மகளிரும் ரூ. 50,000 வரை சேமிப்பு - முதல்வர் ஸ்டாலின்
விடியல் பயணத் திட்டத்தால் 51 மாதங்களில் ஒவ்வொரு மகளிரும் ரூ.50,000 வரை சேமித்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கும் வகையிலான மகளிர் விடியல் பேருந்து பயணத் திட்டத்தை தமிழக அரசு கடந்த 2021-இல் கொண்டு வந்தது.
இந்தத் திட்டத்துக்கு தமிழக பெண்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. அதன்படி இந்தப் பேருந்துகளில், மகளிர் விடியல் பயணத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட நாளிலிருந்து கடந்த ஜூலை வரை 144.37 கோடி பெண்கள் பயணித்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்தது.
“வீட்டவிட்டு வெளிய போயிட்டு வரணும்னாலே 50 ரூபாய் தேவை. நான் வீட்டுலயே இருந்துக்குறேன்” என்ற எண்ணத்தை - பொருளாதாரத் தடையைத் தகர்த்து, கல்விக்கான - வேலைவாய்ப்புக்கான - முன்னேற்றத்துக்கான பயணத்தைச் சாத்தியமாக்கியது #விடியல்_பயணம்!
— M.K.Stalin (@mkstalin) August 18, 2025
நமது #DravidianModel-இன் 51 மாதங்களுக்குள் விடியல்… pic.twitter.com/t16ZJ2Qzwi
மகளிர் விடியல் பேருந்து பயணத் திட்டம் குறித்து முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். அவரின் பதிவில், ”வீட்டவிட்டு வெளிய போயிட்டு வரணும்னாலே 50 ரூபாய் தேவை. நான் வீட்டுலயே இருந்துக்குறேன்” என்ற எண்ணத்தை - பொருளாதாரத் தடையைத் தகர்த்து, கல்விக்கான - வேலைவாய்ப்புக்கான - முன்னேற்றத்துக்கான பயணத்தைச் சாத்தியமாக்கியது நமது அரசின் விடியல் பயணம் திட்டம்.
51 மாதங்களுக்குள் விடியல் பயணத்தின் மூலம் நமது சகோதரிகள் 50 ஆயிரம் ரூபாய் வரை சேமித்துள்ளதும் - அந்தத் திட்டத்துக்கு அரசு செலவழிப்பதும், மகளிர் முன்னேற்றத்துக்கான முதலீடு!” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க: தீபாவளி முன்பதிவு: சில நிமிடங்களிலேயே விற்றுத்தீர்ந்த ரயில் டிக்கெட்!