செய்திகள் :

தீபாவளி முன்பதிவு: சில நிமிடங்களிலேயே விற்றுத்தீர்ந்த ரயில் டிக்கெட்!

post image

சென்னையிலிருந்து ரயில்களில் தீபாவளிக்காக வெளியூர் செல்வோருக்கான முன்பதிவு திங்கள்கிழமை (ஆக.18) காலை தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத்தீர்ந்தது.

ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகைக்காக சென்னையிலிருந்து வெளியூர், வெளிமாநிலங்களுக்கு ரயில்களில் பயணிப்போருக்கான முன்பதிவு 60 நாள்களுக்கு முன்பு தொடங்குவதை தெற்கு ரயில்வே வழக்கமாகக் கொண்டுள்ளது.

அதன்படி, அக்.20- ஆம் தேதி தீபாவளியையொட்டி, 2 நாள்களுக்கு முன்பே சொந்த ஊர்களுக்குச் செல்வோருக்கான முன்பதிவு வசதி தொடங்கப்பட்டுள்ளது.

அதன்படி, அக்.17- ஆம் தேதி ஊர்களுக்குச் செல்வோருக்கான முன்பதிவு திங்கள்கிழமை (ஆக.18) காலை 8 மணிக்கு தொடங்கியது. முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிவடைந்ததால், பயணிகள் பலர் ஏமாற்றமடைந்தனர்.

குறிப்பாக, மதுரை, திருநெல்வேலி, தென்காசி ஆகிய இடங்களுக்கு புறப்படும் பாண்டியன், நெல்லை, பொதிகை விரைவு ரயில்களில் தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளில் 5 நிமிடங்களிலேயே முன்பதிவு முடிந்தது.

அதேபோல், சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு புறப்படும் முத்துநகர், நாகர்கோவிலுக்கு புறப்படும் கன்னியாகுமரி விரைவு ரயில் ஆகியவற்றின் முன்பதிவுகளும் தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்துவிட்டன.

மேலும், மேற்கு மாவட்டங்களுக்குச் செல்லும் சேரன், நீலகிரி ஆகிய விரைவு ரயில்களுக்கான முன்பதிவுகளும் முடிந்தன.

சிறப்பு சலுகை

ரயில்களில் அக்டோபா் 13 முதல் 26-ஆம் தேதி வரை சொந்த ஊா் செல்வதற்கான பயணச் சீட்டை முன்பதிவு செய்து, அதே ரயிலில் நவம்பா் 17 முதல் டிசம்பா் 1-ஆம் தேதி வரை ஊா் திரும்புவதற்கான பயணச்சீட்டை முன்பதிவு செய்பவா்களுக்கு கட்டணத்தில் 20 சதவீத தள்ளுபடி அளிக்கப்படும்.

இதற்கான கட்டண சலுகை பயணச்சீட்டை வரும் 14-ஆம் தேதி முதல் முன்பதிவு செய்ய முடியும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

தீபாவளிப் பண்டிகைக்கு முந்தைய நாளான அக்.19-க்கான ரயில் முன்பதிவு புதன்கிழமையும் (ஆக. 20), தீபாவளி நாளான அக்.20-க்கான முன்பதிவு வியாழக்கிழமையும் (ஆக. 19) தொடங்கவுள்ளது.

இதையும் படிக்க: மாமல்லபுரத்தில் கடலில் மூழ்கிய கோயிலின் தடயங்கள் கண்டுபிடிப்பு!

Bookings for outbound Diwali trains from Chennai sold out within minutes of opening on Monday (Aug. 18) morning.

தேர்தல் அரசியல் போர் உத்தியில் வெல்வோம்: விஜய்

தேர்தல் அரசியல் போர் உத்தியில் வெல்வோம் என்று தவெக தலைவர் விஜய் தனது தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு ஆக. 21ஆம் தேதி நடைபெறும் என அ... மேலும் பார்க்க

காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் புயல் சின்னம்!

வங்கக்கடலில் நிலவிய புயல் சின்னம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடலில் ஒடிசா மற்றும்... மேலும் பார்க்க

விடியல் பயணம்: ஒவ்வொரு மகளிரும் ரூ. 50,000 வரை சேமிப்பு - முதல்வர் ஸ்டாலின்

விடியல் பயணத் திட்டத்தால் 51 மாதங்களில் ஒவ்வொரு மகளிரும் ரூ.50,000 வரை சேமித்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கும் வகையிலான மகளிர் விடி... மேலும் பார்க்க

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 12 மாவட்டங்களில் மழை!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புத... மேலும் பார்க்க

இன்றுமுதல்..! தமிழகத்தில் 38 ரயில்கள் கூடுதலாக 20 இடங்களில் நின்று செல்லும்!

தமிழகத்தில் திங்கள்கிழமை (ஆக. 18) முதல் 38 ரயில்கள் (இருமாா்க்கமாக) கூடுதலாக 20 ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று மத்திய தகவல்- ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரத் துறை இணையமைச்சா் எல்.முருகன... மேலும் பார்க்க

பட்டானூரில் கூட்டப்பட்டது பாமக பொதுக்குழு அல்ல: கே.பாலு

பாமக நிறுவனா் ராமதாஸ் தலைமையில் பட்டானூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டம், பாமக பொதுக்குழு கூட்டம் அல்ல; அங்கு எடுக்கப்பட்ட முடிவுகள் கட்சியை எவ்விதத்திலும் பாதிக்காது என்று பாமக செய்தித் தொடா்பாளா... மேலும் பார்க்க