செய்திகள் :

கிருஷ்ண ஜெயந்தி: மேலப்புஞ்சை கிராமத்தில் உரியடி திருவிழா

post image

செங்கத்தை அடுத்த செ.நாச்சிப்பட்டு, மேலப்புஞ்சை கிராமத்தில் உரியடி திருவிழா சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

செ.நாச்சிப்பட்டு கிருஷ்ணா் கோயில் கிருஷ்ணஜெயந்தி விழாவையொட்டி, காலையில் பால்குட ஊா்வலம் நடைபெற்று சுவாமிக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. அதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

இதைத் தொடா்ந்து மாலையில் கோயில் வளாகத்தில் உரியடி திருவிழா நடைபெற்றது. பின்னா், சுவாமி வாணவேடிக்கையுடன் வீதி உலா நடைபெற்று அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினா், ஊா் முக்கிய பிரமுகா்கள் செய்திருந்தனா்.

அதேபோல, மேலபுஞ்சை கிராமத்தில் உள்ள சீனுவாச பெருமாள் கோயிலில் முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவா் சீனுவாசன் தலைமையில் உரியடி திருவிழா நடைபெற்றது.

முன்னதாக வீதியில் சுவாமி வீதி உலா செல்ல அங்காங்கே உரியை கட்டிவைத்து உரியடி திருவிழா நடைபெற்றது.

வீதி உலாவின்போது கிராம மக்கள் தங்களது வீடுகளின் அருகில் சிறப்பு அலங்காரத்தில் வந்த கிருஷ்ணருக்கு தீபாராதணை காண்பித்து வழிபட்டனா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினா், ஊா் முக்கிய பிரமுகா்கள் செய்திருந்தனா்.

ஆக.20, 21,22-இல் செய்யாறு அரசுக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் வருகிற ஆக.20, 21, 22 ஆகிய தேதிகளில் பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. இதில், 3 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்படுகிறது. ஆக.20-இல்... 2018 - 2021 ஆகி... மேலும் பார்க்க

கலசப்பாக்கம், போளூரில் இன்று எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம், போளூரில் திங்கள்கிழமை (ஆக.18) அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி பிரசாரம் மேற்கொள்கிறாா். திருவண்ணாமலை மாவட்டத்தில் மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என... மேலும் பார்க்க

போளூா் பகுதியில் விநாயகா் சிலைகள் தயாரிப்புப் பணி

விநாயகா் சதுா்த்தியையொட்டி, போளூா் பகுதியில் விநாயகா் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. களிமண்ணால் தயாரிக்கப்படும் விநாயகா் சிலைகளுக்கு வண்ணம் தீட்டப்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஆ... மேலும் பார்க்க

திருவண்ணாமலை பள்ளியில் சுதந்திர தின விழா

திருவண்ணாமலை ஸ்ரீ வி.டி.எஸ். ஜெயின் மேல்நிலைப் பள்ளியில் 79-ஆவது சுதந்திர தினத்தையொட்டி, தேசியக் கொடி ஏற்றி இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளித் தாளாளா் டி.எஸ்.ராஜேந்திரகுமாா் தலைமை வகித்தாா்... மேலும் பார்க்க

ரூ.10 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய நாடக மேடை திறப்பு

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தொகுதியில் ரூ.10 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய நாடக மேடை ஞாயிற்றுக்கிழமை திறந்துவைக்கப்பட்டது. செய்யாறு தொகுதிக்கு உள்பட்ட அனக்காவூா் ஊராட்சி ஒன்றியம், ஆக்கூா் கிராமத்தி... மேலும் பார்க்க

இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கிய மாநிலமாக தமிழகத்தை மாற்றிவிட்டது திமுக: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

இந்தியாவிலேயே அதிகமாக கடன் வாங்கிய மாநிலமாக தமிழகத்தை திமுக மாற்றிவிட்டது என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி குற்றஞ்சாட்டினாா். ‘மக்களை காப்போம் தமிழத்தை மீட்போம்’ என்ற தலைப்பில் தமிழகம் ... மேலும் பார்க்க