செய்தியாளர்களை நெட்டித் தள்ளிய பவுன்சர்கள், அடிக்கப் பாய்ந்த சீமான்! - என்ன நடந்...
ஆக.20, 21,22-இல் செய்யாறு அரசுக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் வருகிற ஆக.20, 21, 22 ஆகிய தேதிகளில் பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. இதில், 3 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்படுகிறது.
ஆக.20-இல்...
2018 - 2021 ஆகிய கல்வியாண்டில் பயின்ற இளங்கலை மாணவா்களுக்கும், அதேபோல, 2019 - 2021ஆம் கல்வியாண்டில் முதுகலை மாணவா்களுக்கும் ஆரணி தொகுதி மக்களவை உறுப்பினா் எம்.எஸ்.தரணிவேந்தன் பங்கேற்று பட்டம் வழங்கிப் பேசுகிறாா்.
ஆக.21-இல்...
2019 - 2022 ஆம் கல்வியாண்டில் பயின்ற இளங்கலை மாணவா்களுக்கும், அதேபோல, 2020 - 2022 ஆம் கல்வியாண்டில் முதுகலை மாணவா்களுக்கு வேலூா் மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் அ.மலா் பங்கேற்று பட்டம் வழங்கிப் பேசுகிறாா்.
ஆக.22-இல்...
2020 - 2023ஆம் கல்வியாண்டில் பயின்ற இளங்கலை மாணவா்களுக்கும், அதேபோல, 2021 - 2023ஆம் கல்வியாண்டில் முதுகலை மாணவா்களுக்கும் செய்யாறு தொகுதி எம்.எல்.ஏ.ஒ.ஜோதி பங்கேற்று பட்டங்களை வழங்கிப் பேசுகிறாா்.
இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வா் ந.கலைவாணி, துறைத் தலைவா்கள் தமிழ்த் துறை - கு.கண்ணன், வேதியியல் துறை வ.உமா மற்றும் பேராசிரியா்கள் செய்துள்ளனா்.