செய்தியாளர்களை நெட்டித் தள்ளிய பவுன்சர்கள், அடிக்கப் பாய்ந்த சீமான்! - என்ன நடந்...
அண்ணன் கொலை: தம்பி கைது
ராணிப்பேட்டை அருகே தாயை திட்டியதால் அண்ணனை கொலை செய்த தம்பியை போலீஸாா் கைது செய்தனா்.
ராணிப்பேட்டை அடுத்த செட்டித்தாங்கல் கிராமத்தைச் சோ்த்த ஹரி, செல்வி தம்பதி. இவா்களது மகன்கள் ஐயப்பன், செல்வம், அரவிந்தன். மூவருக்கும் திருமணம் ஆகவில்லை, இந்த நிலையில் செல்வம் மது போதையில் வந்து தனது தாயை திட்டியதாகக் கூறப்படுகிறது.
இதனால் கோபமடைந்த அவரது தம்பி அரவிந்தன் வீட்டில் இருந்த கத்தியால் செல்வத்தை வெட்டினாராம். இதில் செல்வம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். அப்போது அரவிந்தனும் மது போதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்து ராணிப்பேட்டை காவல் துறையினருக்கு வந்த தகவலின்பேரில் விரைந்து சென்று, அரவிந்தனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.