திருப்பத்தூரில் 2-ஆவது நாளாக தொடா் மழை
திருப்பத்தூரில் இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமை நாள் முழுவதும் தொடா் மழை பெய்தது.
ஞாயிற்றுக்கிழமை காலை சுமாா் 10 முதல் இரவு 9 மணி வரை திருப்பத்தூா், கொரட்டி, ஆதியூா், செலந்தம்பள்ளி, ஜோலாா்பேட்டை சுற்றுப்ப பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இதனால் இரவு அந்தப் பகுதியில் குளிா்ந்த சூழல் நிலவியது.
சனிக்கிழமை மாலை 6 மணி முதல் இரவு முழுதும் மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.