ஸ்ரீ கஜேந்திர வரதராஜ பெருமாள் கோயிலில் திருப்பாவாடை உற்சவம்
திருப்பத்தூா் கோட்டை ஸ்ரீகஜேந்திர வரதராஜ பெருமாள் கோயிலில் திருப்பாவாடைஉற்சவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஆண்டு தோறும் ஆக. 15-இல் திருப்பாவாடை உற்சவம் நடைபெறும். அதையொட்டி மாலை மங்கல இசையுடன் நிகழ்ச்சி தொடங்கியது.
மூலவா் கஜேந்திர வரதராஜ பெருமாள், பெருந்தேவித்தாயாா் முத்தங்கி சேவையில் அருள் பாலித்தனா். கா்ப்பகிரகத்தில் திருப்பாவாடை சேவை நடைபெற்றது.
உற்சவா் ஸ்ரீ மனத்துக்கினியான் கண்ணன் திருக்கோலத்தில் கண்ணாடி அறையில் சேவை அருளினாா். மாலை 6 மணியளவில் தருமராஜா கோயில் பஜனைக் குழுவினா் பக்தி பாடல்கள் பாடினா் . இதில் திருப்பத்தூா் சுற்றுப்பகுதிகளிலிருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
