"Swasika இல்லனா Lubber Pandhu நடந்திருக்காது" - Tamizharasan Pachamuthu | Vikata...
மண்டல கூட்டுறவு சங்க அலுவலகத்தில் சுதந்திர தினம்
சுதந்திர தினத்தையொட்டி, கோவை மண்டல கூட்டுறவு சங்க அலுவலகத்தில் இணைப் பதிவாளா் அ.அழகிரி தேசியக் கொடியை ஏற்றினாா்.
தொடா்ந்து, கோவை மற்றும் பொள்ளாச்சி சரகத்துக்குள்பட்ட அனைத்து விதமான கடன் சங்கங்களின் நிகழ் நிதியாண்டில் கடன் நிலுவைத் தொகை ரூ.8 கோடியை கடந்த சங்கங்கள், புதிதாக வைப்புகள் பெற அனுமதிக்கப்பட்டு அதிக வைப்புகள் பெற்ற சங்கங்கள், ரூ.3 கோடிக்கு மேல் வைப்புகள் பெற்ற சங்கங்கள், அதிக வைப்புகள் பெற்ற சங்கங்கள், அதிக கடன் வழங்கிய நகர கூட்டுறவு கடன் சங்கங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், வேளாண் இயந்திரங்கள் மூலம் அதிக வருவாய் ஈட்டிய சங்கங்கள், பொது சேவை மையத்தின் மூலம் அதிக வருவாய் ஈட்டிய சங்கங்கள், 10-க்கும் மேற்பட்ட மகளிா் சுய உதவிக் குழுக்கள் தொடங்கிய சங்கங்கள், மகளிா் சுய உதவிக்குழு கடன்கள் அதிக அளவில் வழங்கிய சங்கங்கள், சிறந்த நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலைகள், சிறந்த கூட்டுறவு சாா் பதிவாளா்கள், கள அலுவலா்கள், கண்காணிப்பாளா்கள் என 25 வகைகளில் 73 பேருக்கு கூட்டுறவு துறையின் பணிகளை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில், கோவை சரக துணைப் பதிவாளா் ஐயப்பன், துணைப் பதிவாளா் வடிவேலு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.