செய்திகள் :

இந்தியாவில் முதல்முறையாக பிவி கண்காணிப்பு செயற்கைக்கோள் திரள் அமைக்க அனுமதி

post image

இந்தியாவில் முதல்முறையாக பிவி கண்காணிப்பு செயற்கைக்கோள் திரள் அமைக்க பிக்ஸல் ஸ்பேஸ் இந்தியா தலைமையிலான கூட்டிணைவுக்கு இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையம் (இன்ஸ்பேஸ்) அனுமதி அளித்துள்ளது.

இந்திய விண்வெளி வரலாற்றில் முதல்முறையாக புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் திரள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக நடத்தப்பட்ட ஏலத்தில் பங்கெடுத்த 3 கூட்டிணைவுகளை தீவிரமாக ஆராய்ந்தபிறகு, பெங்களூரை சேர்ந்த பிக்ஸல் ஸ்பேஸ் இந்தியா தலைமையிலான கூட்டிணைவுக்கு இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையம் ஆக. 12-ஆம் தேதி அனுமதி அளித்துள்ளது.

இந்த கூட்டிணைவு பிக்ஸல் ஸ்பேஸ் இந்தியா, பியர்சைட் ஸ்பேஸ், ஸôட்ஷூர் அனாலிட்டிக்ஸ் இந்தியா, துருவா ஸ்பேஸ் நிறுவனங்களை உள்ளடக்கியதாகும்.

அரசு, தனியார் கூட்டுமுயற்சியில் செயல்படுத்தப்பட இருக்கும் இந்த திட்டத்தின்கீழ், அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.1,200 கோடி முதலீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் திரள், 12 செயற்கைக் கோள்களை கொண்டதாகும். இதனை வடிவமைத்து, கட்டமைத்து, செயல்படுத்தும் முழுபொறுப்பும் பிக்ஸல் ஸ்பேஸ் இந்தியா தலைமையிலான கூட்டிணைவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் திரளில் பாராக்ரோமாட்டிக், மல்ட்டிஸ்பெக்ட்ரல், ஹைபர் ஸ்பெக்ட்ரல், மேக்ரோவேவ் சிந்தடிக் அபர்ச்சர் ரேடார் சென்சார்கள் பொருத்தப்பட்டிருக்கும். இது, வானிலை மாற்றக் கண்காணிப்பு, பேரிடர் மேலாண்மை, வேளாண்மை, உள்கட்டமைப்பு, கடல் கண்காணிப்பு, தேசிய பாதுகாப்பு, நகர்ப்புற திட்டமிடல் உள்ளிட்டவற்றுக்கு பயன்படுத்தக்கூடிய திறனாய்வுக்கு உகந்த தரவுகள், மதிப்புக் கூட்டப்பட்ட சேவைகளை அளிக்கும். இதுதவிர, உலக அளவில் தேவைக்கேற்ற புவியியல் நுண்ணறிவு தரவுகளையும் வழங்கும்.

இந்த திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் உயர் தெளிவுத்திறன் மற்றும் உள்நாட்டு தரவுகளை உறுதி செய்ய முடியும். மேலும், இதுபோன்ற தரவுகளுக்கு வெளிநாடுகளை சார்ந்திருக்க வேண்டியதில்லை. இதுதவிர, தரவு இறையாண்மையை உறுதி செய்வதோடு, விண்வெளிசார் தரவுகள் அடிப்படையிலான தீர்வுகளை முன்வைக்கும் நாடுகளின் வரிசையில் இந்தியா இடம்பெறும் என இன்ஸ்பேஸ் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையம் (இன்ஸ்பேஸ்) தலைவர் பவன் கோயங்கா கூறுகையில், 'இதன்மூலம், விண்வெளித் துறையில் இந்திய தனியார் நிறுவனங்களின் காலம் தொடங்கவிருக்கிறது. இந்த முயற்சியின் மூலம் இந்தியா மற்றும் வெளிநாட்டு சந்தைகளில், பெரிய அளவிலான அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய வணிக ரீதியாக பயன் விளைவிக்கக் கூடிய விண்வெளி திட்டங்களை செயல்படுத்தும் ஆற்றல் இந்திய விண்வெளி நிறுவனங்களுக்கு இருப்பதை வெளிச்சம்போட்டு காட்டும். அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் கூட்டுமுயற்சி, வளர்ச்சி, புத்தாக்கம், தற்சார்புக்கு உகந்த சூழலை கட்டமைக்கும்.

அரசு மற்றும் தனியார் கூட்டுமுயற்சியில், மத்திய அரசு கூர்திறன், தொழில்நுட்பம், கொள்கை ரீதியான ஒத்துழைப்பை அளிக்கும். அதே நேரம், பிக்ஸல் ஸ்பேஸ் இந்தியா தலைமையிலான கூட்டிணைவு, செயற்கைக் கோள்களை தயாரித்து, இந்தியாவில் இருந்து விண்ணில் செலுத்துவது, தரை கட்டமைப்புகளை உருவாக்குவது, தகவல்தொடர்பு சேவைகளை செயல்படுத்தும். அதன் முழு உரிமையும் அந்த கூட்டிணைவையே சாரும். இந்த திட்டம் 4 ஆண்டுகளில் படிப்படியாக செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படும். அதன் மூலம் தரமுயர்த்துதல், சேவை விரிவாக்குவது போன்றவற்றை உறுதி செய்யும்' என்றார்.

எரிவாயு உருளை வெடித்ததில் 10 வயது சிறுவன் உயிரிழப்பு; 11 போ் காயம்

எரிவாயு உருளை வெடித்ததில் 10 வயது சிறுவன் உயிரிழந்தாா். இந்த சம்பவத்தில் 11 போ் படுகாயமடைந்தனா். பெங்களூரு, வில்சன்காா்டன் பகுதியில் உள்ள சின்னையன்பாளையாவில் அமைந்துள்ள ஸ்ரீராமகாலனியில் வெள்ளிக்கிழமை... மேலும் பார்க்க

அரசமைப்புச் சட்டத்தை தவறாக பயன்படுத்துவதற்கு எதிராக மக்கள் குரல் எழுப்ப வேண்டும்: சித்தராமையா

அரசமைப்புச் சட்டத்தை தவறாக பயன்படுத்துவதற்கு எதிராக மக்கள் குரல் எழுப்ப வேண்டும் என முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா். பெங்களூரு, மானெக்ஷா அணிவகுப்பு திடலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 79-ஆவது சுதந்திர தி... மேலும் பார்க்க

வெறுப்பு பேச்சுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க புதிய சட்டம்

வெறுப்பு பேச்சுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க புதிய சட்டம் கொண்டுவரப்படும் என கா்நாடக உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் தெரிவித்தாா். கா்நாடக சட்ட மேலவையில் வியாழக்கிழமை கேள்விநேரத்தின்போது, பாஜக உறுப்பினா... மேலும் பார்க்க

கொலை வழக்கில் ஜாமீன் ரத்து: நடிகா் தா்ஷன் கைது

கொலை வழக்கில் கா்நாடக உயா்நீதிமன்றம் அளித்திருந்த ஜாமீனை ரத்துசெய்து உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டதைத் தொடா்ந்து, நடிகா் தா்ஷன், நடிகை பவித்ரா உள்ளிட்டோா் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்ப... மேலும் பார்க்க

தெருநாய்களை தொல்லையாக கருதுவது கொடுமை

தெருநாய்களை தொல்லையாக கருதுவது கொடுமையானது என முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா். புது தில்லியில் உள்ள தெருநாய்களை வீதியில் இருந்து அப்புறப்படுத்தி காப்பகங்களில் பராமரிக்குமாறு அம்மாநில அரசுக்கு உச்சந... மேலும் பார்க்க

முறைகேடு குற்றச்சாட்டு: சித்தராமையாவின் தோ்தல் வெற்றி குறித்து விசாரிக்க பாஜக வலியுறுத்தல்

வாக்குகளை வாங்கி முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதால், முதல்வா் சித்தராமையாவின் தோ்தல் வெற்றி குறித்து விசாரிக்க பாஜக வலியுறுத்தியுள்ளது. 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்த... மேலும் பார்க்க