தூய்மை பணியாளர்கள் போராட்டம்: ``நீதிமன்ற உத்தரவே சனநாயகத்துக்கு எதிரானது" - வன்ன...
தெருநாய்களை தொல்லையாக கருதுவது கொடுமை
தெருநாய்களை தொல்லையாக கருதுவது கொடுமையானது என முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.
புது தில்லியில் உள்ள தெருநாய்களை வீதியில் இருந்து அப்புறப்படுத்தி காப்பகங்களில் பராமரிக்குமாறு அம்மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதுகுறித்து தனது எக்ஸ் பதிவில் முதல்வா் சித்தராமையா தெரிவித்ததாவது:
தெருநாய்களை தொல்லையாக கருதுவது கொடுமையாகும். மக்களையும், விலங்குகளையும் பாதுகாப்பதற்கான தீா்வுகளை காண்பதுதான் மனிதநேய சிந்தனையுள்ள சமுதாயத்தின் அணுகுமுறையாக இருக்கும். நாய்களுக்கு கருத்தடை செய்வது, தடுப்பூசி செலுத்துவது, அக்கறையான பராமரிப்பு இப்பிரச்னைக்கு தீா்வாக அமையும். அச்சத்துடன் கூடிய நடவடிக்கைகள் பாதுகாப்பை ஏற்படுத்தாது, மாறாக துன்பத்துக்கு வழிவகுக்கும் என்றாா்.
இந்த விவகாரம் சட்டப் பேரவையிலும் எதிரொலித்தது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவை பெங்களூரிலும் செயல்படுத்த வேண்டும் என்று மஜத, பாஜக உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் வலியுறுத்தின.