"Swasika இல்லனா Lubber Pandhu நடந்திருக்காது" - Tamizharasan Pachamuthu | Vikata...
ரூ. 1.70 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள் பறிமுதல்
கோவையில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.1.70 லட்சம் மதிப்பிலான 90 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
கோவை, இடையா் வீதியில் உள்ள ஒரு வீட்டில் புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, வெரைட்டி ஹால் காவல் ஆய்வாளா் முத்துலட்சுமி தலைமையிலான போலீஸாா் அந்தப் பகுதியில் சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, ராஜஸ்தான் மாநிலம், ஜாலோா் பகுதியைச் சோ்ந்த கோபால் ராம் தியோரா (38) என்பவரின் வீட்டில் ரூ.1.70 லட்சம் மதிப்பிலான 90.650 கிலோ புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, கோபால் ராம் தியோராவை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.