செய்திகள் :

வைட்டமின் சி முதல் இதய ஆரோக்கியம் வரை முருங்கைக்காய் தரும் நற்பலன்கள்!

post image

முருங்கைக்கீரை சூப்பர் ஃபுட் எனக் கொண்டாடுகிறோம். முருங்கைக்காயும் நமக்கு ஆரோக்கியம் தருவதில் சிறப்பானதுதான் என்கிற உணவியல் ஆராய்ச்சியாளர் சிவப்ரியா மாணிக்கவேல், அதன் பலன்களையும் சில முருங்கைக்காய் ரெசிபிகளையும் இங்கே பகிர்கிறார்.

முருங்கைக்காய் தரும் நற்பலன்கள்!
முருங்கைக்காய் தரும் நற்பலன்கள்!

’’நம் நாட்டில் பரவலாகக் கிடைக்கும் முருங்கைக்காயின் சதை, அதிக மருத்துவப் பண்புகளைக் கொண்டது; எண்ணற்ற ஊட்டச்சத்துகளை உடையது. ஆரோக்கியத்தை மேம்படுத்தி, நோய்களை அண்டவிடாமல் நம்மைக் காக்க வல்லது. மிகுதியான பி காம்பிளக்ஸ், வைட்டமின் சி மற்றும் தாதுச்சத்துகள் இதில் உள்ளன. பிஞ்சு முருங்கைக் காய்களில் ஒலீயிக் அமிலம் மிக அதிகமாக உள்ளது. இதை அடிக்கடி உட்கொள்வதால் இதய நோய் அபாயத்தைத் தடுக்கலாம்.

முருங்கைக்காய்களில் உள்ள வைட்டமின் சி, ஆன்டிபயாடிக் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட் பண்புகளைக் கொண்டது. இதனால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. முருங்கையில் உள்ள அதிக நார்ச்சத்தும், எண்ணிலடங்கா பைட்டோ கெமிக்கல்களும் நீரிழிவு, ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும். அதோடு, வயிற்றுப்புண்ணை ஆற்றவல்ல ஒரு மருந்தாகவே இது செயல்படுகிறது. கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்குப் பயன்தரும் கால்சியம், இரும்பு மற்றும் வைட்டமின்களைக் கொண்டுள்ள அருமையான இயற்கை டானிக் இது!

முருங்கைக்காய் சூப்
முருங்கைக்காய் சூப்

செய்முறை: முருங்கைக்காய் வேகவைத்த தண்ணீர் ஒரு கப், பருப்பு வேகவைத்த தண்ணீர் ஒரு கப், 2 டீஸ்பூன் முருங்கை சதைப்பகுதி என மூன்றையும் ஒன்றாகக் கலந்து மசிக்கவும். கடாயில் அரை டீஸ்பூன் நெய் ஊற்றி கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம், நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியதும் அரை டீஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். இத்துடன் எடுத்து வைத்திருக்கும் முருங்கைத் தண்ணீர்க் கலவையைக் கலந்து, இத்துடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கொதிக்கவைத்து இறக்கவும். இறக்கும்முன் மிளகுத்தூள், கொத்தமல்லித்தழை சேர்த்து இறக்கினால் சுவையான சூப் ரெடி.

செய்முறை: முருங்கைக்காயைக் கழுவி, சிறு துண்டுகளாக்கவும். பிறகு, ஒரு குக்கரில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி மஞ்சள்தூள், முருங்கைக்காய் சேர்த்து 3-5 விசில் வரும்வரை வேக விட்டு எடுக்கவும். பிறகு குக்கரைத் திறந்து, ஒரு ஸ்பூனால் முருங்கையின் சதைப்பகுதியை மட்டும் எடுத்து மசித்துத் தனியாக எடுக்கவும்.

அடுப்பில் வாணலியை வைத்து இரண்டு டீஸ்பூன் நல்லெண்ணெய்விட்டு சூடாக்கி கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், கறிவேப்பிலை தாளிக்கவும். இத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய பழுத்த தக்காளி, சாம்பார் பொடி சேர்த்து வதக்கவும். பிறகு, முருங்கை யின் சதைப்பகுதி, தேவையான அளவு உப்பு சேர்த்து நீர் வற்றும் வரை வதக்கி இறக்கவும். (தேவையெனில், சிறிதளவு துருவிய தேங்காய், கரம் மசாலாத் தூள் சேர்த்து இறக்கலாம்). இந்தப் பிரட்டலைச் சூடான சாதத்துடன் சேர்த்துப் பிசைந்து சாப்பிட்டால், சுவை அள்ளும்.

முருங்கைக்காய் சதைப் பிரட்டல்
முருங்கைக்காய் சதைப் பிரட்டல்

செய்முறை: ஒரு கப் முருங்கை சதை, கால் கப் வேகவைத்த பாசிப்பருப்பு எடுத்து, தனியாக மசித்து வைக்கவும். தேங்காய், சீரகம், வெங்காயத்தை நன்கு அரைத்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெய்விட்டுக் காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறி வேப்பிலை தாளித்து, பருப்பு - முருங்கை சதை கலவையைக் கலக்கவும். இத்துடன் அரைத்த தேங்காய் - சீரகம் - வெங்காயக் கலவையைச் சேர்த்து மஞ்சள்தூள், உப்பு கலந்து கொதிக்கவிடவும். கலவை தளதள என்று கொதிக்கும் பதத்தில் இறக்கிவிடவும்.’’

முருங்கைக்காய்களை எங்கு பார்த்தாலும் மிஸ் பண்ணிடாதீங்க!

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Doctor Vikatan: கிட்னி ஸ்டோன்ஸ்: அறுவை சிகிச்சை தவிர்த்து, சித்த மருத்துவத்தில் தீர்வு உண்டா?

Doctor Vikatan:கிட்னி ஸ்டோன்ஸை சித்த மருந்துகளால் கரைக்க முடியுமா, எந்த அளவுவரை மருந்துகளால் கரைக்கலாம். சித்த மருந்துகள் எடுத்துக்கொண்டால் அறுவை சிகிச்சையைத் தவிர்க்க முடியுமா?பதில் சொல்கிறார், திருப... மேலும் பார்க்க

Doctor Vikatan: கண்களில் Cataract; அறுவை சிகிச்சையைத் தவிர்த்து வேறு தீர்வுகள் உண்டா?

Doctor Vikatan: கேட்டராக்ட் பிரச்னையின் அறிகுறிகள் எப்படியிருக்கும், கேட்டராக்ட் இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட உடனேயே அறுவை சிகிச்சை செய்ய முடியாதா, எத்தனை வருடங்களுக்குள் செய்ய வேண்டும். அறுவை சிகிச்சை... மேலும் பார்க்க

Thyroid Reversal: தைராய்டு தானாகவே ரிவர்ஸ் ஆகுமா? உண்மையை உடைக்கும் மருத்துவர்கள்! | InDepth

தைராய்டு ரிவர்சல் அடிக்கடி சோஷியல் மீடியாக்களில் கண்களில்படுகிற விளம்பரம் இது. 'உங்க தைராய்டு ரிவர்சல் ஆகணுமா? இத சாப்பிடுங்க; இத சாப்பிடாதீங்க; இதையெல்லாம் ஃபாலோ பண்ணுங்க' என்று ரீல்ஸ் வரும். கூடவே, ... மேலும் பார்க்க

``தலைமைப் பண்பு இல்லாதவருக்கு தோல்வி நிச்சயம்'' - எடப்பாடி பழனிசாமி மீது ஓபிஎஸ் குற்றச்சாட்டு

தலைமைப் பண்பு இல்லாதவருக்கு தோல்வி நிச்சயம் என்று ஓ.பன்னீர் செல்வம் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "அனைத்திந்திய அண்ணா திராவிட... மேலும் பார்க்க

``இறந்தவர்களுடன் தேநீர் அருந்த வாய்ப்பு வழங்கிய தேர்தல் ஆணையத்துக்கு நன்றி'' - ராகுல் காந்தி

பீகார் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலுக்கு முன்னேற்பாடாக, தேர்தல் ஆணையம் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை மேற்கொண்டது. அந்த பணியின் போது, சுமார் 65 லட்சம்... மேலும் பார்க்க

``பணி நிரந்தரம் இல்லை; தூய்மைப் பணியாளர்களுக்கு 6 திட்டங்கள்'' - ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை

சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே, தனியார்மயமாக்கலை எதிர்த்தும், பணி நிரந்தரம் கோரியும் 13 நாள்களாகப் போராடி வந்த தூய்மைப் பணியாளர்களை நேற்று நள்ளிரவில் போலீஸார் வலுக்கட்டாயமாகக் கைதுசெய்தனர்.போராட்டக்... மேலும் பார்க்க