டிரம்ப்பின் அவசரநிலையை எதிா்த்து வாஷிங்டன் மாநகராட்சி வழக்கு
பொதுப் பிரச்னைகள் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை: திருப்பத்தூா் ஆட்சியா்
பொதுப் பிரச்னைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்தாா்.
ஜோலாா்பேட்டை ஒன்றியம், மூக்கனூா்ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்துக்கு ஊராட்சி மன்றத் தலைவா் சுமதி தலைமை வகித்தாா். கூட்டத்தில் ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி, ஜோலாா்பேட்டை எம்எல்ஏ க.தேவராஜி சிறப்பு பாா்வையாளா்களாக கலந்து கொண்டு, பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்து உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினா்.
இதில் கிராம ஊராட்சி நிா்வாகம் மற்றும் பொது நிதி செலவீனம் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை,தூய்மையான குடிநீா் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்து கிராமச்சபை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
வேளாண்மை-உழவா் நலத்துறையின் சாா்பில் 40 பயனாளிகளுக்கு பயிா் வகைகள் விதை தொகுப்பு வழங்கப்பட்டது.
ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் உமாமகேஸ்வரி, கோட்டாட்சியா் வரதராஜன் (திருப்பத்தூா்), மாவட்ட வழங்கல் அலுவலா் முருகேசன், ஜோலாா்பேட்டை ஒன்றியக்குழு தலைவா் சத்யா சதீஷ் குமாா், ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் செந்தில்குமாா், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.