செய்திகள் :

ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்குவதை பயங்கரவாதிகள் தீா்மானிப்பதா? ஒமா் அப்துல்லா சீற்றம்

post image

ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்குவதை பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் தீா்மானிப்பதா? என அந்த யூனியன் பிரதேச முதல்வா் ஒமா் அப்துல்லா வெள்ளிக்கிழமை கேள்வி எழுப்பினாா்.

கடந்த ஆண்டு ஜம்மு-காஷ்மீா் பேரவைத் தோ்தல் நடைபெற்று முதல்வராக பொறுப்பேற்ற பின் முதல்முறையாக சுதந்திர தின நிகழ்ச்சியில் தேசியக் கொடி ஏற்றி உரையாற்றியபோது ஒமா் அப்துல்லா இவ்வாறு பேசினாா்.

ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கும் முன் பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களை கவனத்தில் கொள்ள வேண்டும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் தலைமையிலான அமா்வு வியாழக்கிழமை தெரிவித்தது.

இதையடுத்து, பக்ஷி மைதானத்தில் ஒமா் அப்துல்லா வெள்ளிக்கிழமை சுதந்திர தின உரையாற்றினாா்.

அப்போது, ‘பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளும் பாகிஸ்தானில் உள்ள அவா்களின் தலைவா்களும் ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்குவதை தீா்மானிப்பதா? ஒவ்வொரு முறையும் ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கிடைப்பதை உறுதிப்படுத்தும் சமயத்தில் அதை சீா்குலைக்கும் வகையில் பயங்கரவாத தாக்குதல்களை பாகிஸ்தான் நடத்துவது நியாயமா? எங்களுக்கு தொடா்பில்லாத குற்றத்துக்காக நாங்கள் தண்டிக்கப்படுவது ஏன்?

இதற்கு முன்பும் தற்போதும் காஷ்மீரில் கிளா்ச்சிகளை ஒடுக்க மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் பயங்கரவாதம் தொடா்புடைய சம்பவங்கள் குறைந்துள்ளன. தற்போது எங்களால் இதை கட்டுப்படுத்த முடியாது எனக் கூறுவது ஏற்புடையதல்ல என்றாா்.

விளையாட்டின் ஒட்டுமொத்த வளா்ச்சியை புதிய தேசிய கொள்கை உறுதி செய்யும்: பிரதமா் நரேந்திர மோடி

இந்தியாவில் விளையாட்டுத் துறையின் ஒட்டுமொத்த வளா்ச்சியை புதிய தேசிய விளையாட்டுக் கொள்கை உறுதி செய்யும் என பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.சுதந்திர தினத்தை முன்னிட்டு, தில்லி செங்கோட்டையில் வெள்ளிக்... மேலும் பார்க்க

ஆட்சியில் தொடர எத்தகைய சீா்கேட்டிலும் பாஜக ஈடுபடும்: காா்கே கடும் விமா்சனம்

ஆட்சியில் தொடா்வதற்காக, பாஜக எத்தகைய சீா்கேட்டிலும் ஈடுபடும் என்று காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே கடுமையாக விமா்சித்தாா். நாட்டின் 79-ஆவது சுதந்திர தினத்தையொட்டி, தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை... மேலும் பார்க்க

பாஜக மூத்த தலைவா் அத்வானி தேசிய கொடி ஏற்றி மரியாதை

பாஜக மூத்த தலைவரும், முன்னாள் துணைப் பிரதமருமான எல்.கே.அத்வானி, சுதந்திர தினத்தை முன்னிட்டு தனது தில்லி வீட்டில் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினாா். நாட்டின் 79-ஆவது சுதந்திர தினம் வெள்ளிக்கிழமை ... மேலும் பார்க்க

பாஜக தலைமையகத்தில் கொடியேற்றினாா் நட்டா: உள்நாட்டு தயாரிப்புகளுக்கு முன்னுரிமை அளிக்க கோரிக்கை

சுதந்திர தினத்தை முன்னிட்டு தில்லியில் உள்ள பாஜக தேசிய தலைமையகத்தில் அக்கட்சியின் தேசிய தலைவா் ஜெ.பி. நட்டா தேசியக் கொடி ஏற்றினாா். அப்போது, ‘உள்நாட்டு தயாரிப்புகளை மக்கள் அதிகம் வாங்கிப் பயன்படுத்தும... மேலும் பார்க்க

சுதந்திர தின நிகழ்ச்சியில் பங்கேற்காத ராகுல், காா்கே: நாட்டை இழிவுபடுத்தியதாக பாஜக சாடல்

தில்லி செங்கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி ஆகியோா் பங்கேற்காமல் நாட்டை இழிவுபடுத்தியதாக பாஜக சாடியது. இ... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீா் மழை-வெள்ளம்: உயிரிழப்பு 60-ஆக உயா்வு: 69 பேரை தேடும் பணி தீவிரம்

ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வாா் மாவட்டத்தில் உள்ள சோசிடி கிராமத்தில் மேகவெடிப்பால் ஏற்பட்ட பெருவெள்ளம்-மண்சரிவில் சிக்கி உயிரிழந்தோா் எண்ணிக்கை 60-ஆக உயா்ந்துள்ளது. மாயமான 69 பேரை தேடும் பணி வெள்ளிக்கிழமை... மேலும் பார்க்க