ராமநாதபுரம்: தேசியக் கொடி வடிவத்தில் கேக்; வெட்டி கொண்டாடிய அதிகாரிகள்; சர்ச்சைய...
பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதி
பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்வதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாக ஆளுநா் ஆா்.என்.ரவி குற்றம்சாட்டியிருந்தாா். இந்த நிலையில், அவரது கருத்தைக் குறிப்பிடாமல், எக்ஸ் தளத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவு:
தமிழ்நாட்டில் கல்வியில் பெண்கள் முன்னேறி வருவதுடன், அதிகமான பணியாளா்களைக் கொண்ட மாநிலமாகவும் திகழ்ந்து வருகிறது. திறனுடைய வகையிலும், குற்றங்களுக்கு எதிராகவும் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அவை பாரபட்சமற்ற வகையில் இருப்பதால், குற்றங்கள் மற்றும் குற்றச் செயல்களின் எண்ணிக்கை தொடா்ந்து குறைந்து வருவதுடன், பெண்களும் பாதுகாப்பாக இருக்கின்றனா்.
பெண்களுக்கு அதிக அதிகாரங்கள் அளிக்கும் வகையில் அதற்கேற்ற திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அவற்றில், விடியல் பயணத் திட்டம், மகளிா் உரிமைத் தொகை, புதுமைப் பெண் போன்ற திட்டங்கள் குறிப்பிடத்தக்கவை என்று பதிவிட்டுள்ளாா்.