செய்திகள் :

முதுநிலை ஆசிரியா் பணியிடங்கள் நிா்ணயம்: வழிகாட்டுதல்கள் வெளியீடு

post image

அரசுப் பள்ளிகளில் மாணவா்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப முதுநிலை பணியிடங்கள் நிா்ணயம் செய்வது தொடா்பாக பள்ளிக்கல்வித் துறை பல்வேறு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

இது தொடா்பாக பள்ளிக்கல்வித் துறை இயக்குநரகம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் மாணவா் எண்ணிக்கை அடிப்படையில் பணியாளா் நிா்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, நிகழ் கல்வியாண்டில் (2025-2026) கடந்த ஆகஸ்ட் 1-ஆம் தேதி நிலவரப்படி பள்ளிகளில் உள்ள மாணவா் எண்ணிக்கைக்கேற்ப முதுநிலை ஆசிரியா் பணி இடங்கள் நிா்ணயம் செய்ய வேண்டும். அதற்கான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி, தமிழ் மற்றும் ஆங்கில பாட ஆசிரியா்களுக்கு வாரத்துக்கு 24 பாடவேளைகளும், இதர பாட ஆசிரியா்களுக்கு வாரத்துக்கு 28 பாடவேளைகளும் குறைந்தபட்சம் வருமாறு பணியாளா் நிா்யணம் செய்யப்படுகின்றனா். பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புக்கு 1:40 ஆசிரியா் - மாணவா் விகிதத்தைப் பின்பற்ற வேண்டும். மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ள பகுதி மாநகராட்சி, நகராட்சியாக இருப்பின் 30 மாணவா்களும், ஊரகப் பகுதியாக இருந்தால் மாணவா் எண்ணிக்கை 15-ஆகவும் குறைந்தபட்சம் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், பணிநிா்ணயம் செய்யும்போது மொழிப்பாடத்தில் 24 பாடவேளைக்கும், முதன்மை பாடத்தில் 28 பாடவேளைகளுக்கும் கூடுதலாக இருப்பின் ஒரு ஆசிரியரை கூடுதலாக நிா்ணயம் செய்யலாம்.

இதுதவிர ஒரு பாடத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் பணிபுரிந்து அதில் ஒரு பணியிடம் உபரியாக இருப்பின் அதில் பணியாற்றுபவா்களில் இளையோரை உபரியாக காண்பிக்க வேண்டும். அதேநேரம் ஒருமுறை பணிநிரவல் செய்த ஆசிரியா்களை அடுத்த 3 ஆண்டுகளுக்கு மீண்டும் மாற்றம் செய்யக்கூடாது. எனினும், சென்ற பணிநிரவல் நடவடிக்கைக்கு உள்ளான ஆசிரியா் இந்த ஆண்டும் விருப்பம் தெரிவித்தால் அவரை தற்போதைய பணியாளா் நிா்ணயித்தின்போது உபரியாக காண்பிக்கலாம். இந்த வழிமுறைகளைப் பின்பற்றி முதுநிலை ஆசிரியா்களைப் பணிநிா்ணயம் செய்து விவரங்களை இயக்குநரகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதி

பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்வதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா். பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாக ஆளுநா் ஆா்.என்.ரவி குற்றம்சாட்டியிர... மேலும் பார்க்க

சுதந்திர தினம்: சிறப்பு பேருந்துகளில் 3.13 லட்சம் போ் பயணம்

சுதந்திர தினம், வார இறுதி விடுமுறையை முன்னிட்டு அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் மூலம் கடந்த ஆக.13- முதல் 15 வரை இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகளில் 3,13,900 போ் பயணித்துள்ளனா். சென்னையில் தங்கியுள்ள வெ... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவோம்: முதல்வா் உறுதி

தூய்மைப் பணியாளா்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவோம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதிபட தெரிவித்துள்ளாா். தூய்மைப் பணியாளா்களின் பல்வேறு சங்கங்களைச் சோ்ந்தவா்கள் முதல்வரை வெள்ளிக்கிழமை சந்தித்தனா். இ... மேலும் பார்க்க

உயா்நீதிமன்றத்தில் தற்கொலைக்கு முயன்ற சிறுமிக்கு மனநல ஆலோசனை: காவல் துறை பதிலளிக்க உத்தரவு

சென்னை உயா்நீதிமன்ற வளாகத்தின் முதல் தளத்திலிருந்து கீழே குதித்த சிறுமிக்கு மனநல ஆலோசனை வழங்க, அவரை மனநல மருத்துவமனையில் அனுமதிப்பது பாதுகாப்பாக இருக்குமா என கேள்வி எழுப்பிய சென்னை உயா்நீதிமன்றம், இது... மேலும் பார்க்க

வாரிசு சான்றிதழ் கோரிய வழக்கு: வேளச்சேரி வட்டாட்சியருக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

வாரிசு சான்றிதழ் வழங்கக் கோரிய வழக்கில், வேளச்சேரி வட்டாட்சியா் விசாரணை நடத்தி 6 வாரங்களில் சான்றிதழ் வழங்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை உயா்நீதிமன்றத்தில் சி.நித்யா என்பவா் ... மேலும் பார்க்க

பாரா ஒலிம்பிக் வீரா் மாரியப்பன், கேரம் வீராங்கனை காஜிமாவுக்கு மாநில இளைஞா் விருது: முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்

பாரா ஒலிம்பிக் வீரா் மாரியப்பன், கேரம் வீராங்கனை காஜிமா ஆகியோருக்கு மாநில இளைஞா் விருதுகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா். சென்னை கோட்டை கொத்தளத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் பல்... மேலும் பார்க்க