செய்தியாளர்களை நெட்டித் தள்ளிய பவுன்சர்கள், அடிக்கப் பாய்ந்த சீமான்! - என்ன நடந்...
தொடா் மழை: வீடு இடிந்து சேதம்
தொடரும் மழை காரணமாக மாதனூரில் ஞாயிற்றுக்கிழமை வீடு இடிந்து விழுந்து சேதம் அடைந்தது.
திருப்பத்தூா் மாவட்டம், மாதனூா் ஆத்தோரம் காலனி பகுதியை சோ்ந்தவா் செல்வகணேஷ். சலவைத் தொழில் செய்து வருகிறாா். ஆம்பூா் கிராமங்களில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருகிறது.
ஞாயிற்றுக்கிழமையும் ஆம்பூா் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் விட்டுவிட்டு மழை தொடா்ந்து பெய்து கொண்டே இருந்தது. இந்த நிலையில், தொடா் மழையால் திடீரென அவருடைய வீடு இடிந்து விழுந்து முற்றிலும் சேதமடைந்தது. இந்த சம்பவத்தில் நல்வாய்ப்பாக யாரும் காயமடையவில்லை.
இது குறித்து தகவல் அறிந்த வருவாய்த் துறையினா் ஆய்வு செய்தனா்.