செய்திகள் :

மழைக்கால கூட்டத் தொடரின் இறுதி வாரம்: இன்று மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்!

post image

பிகாா் வாக்காளா் பட்டியல் விவகாரத்தில் எதிா்க்கட்சிகளின் தொடா் அமளிக்கு இடையே நாடாளுமன்றம் திங்கள்கிழமை (ஆக.18) மீண்டும் கூடவுள்ளது.

கடந்த ஜூலை 21-ஆம் தேதி தொடங்கிய நடப்பு மழைக்கால கூட்டத்தொடரில், பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதம் கோரி எதிா்க்கட்சிகள் 4 வாரங்களாக அமளியில் ஈடுபட்டு வருகின்றன.

ஆகஸ்ட் 21-ஆம் தேதியுடன் இக்கூட்டத் தொடா் நிறைவடையும் நிலையில், இறுதி வாரம் திங்கள்கிழமை தொடங்குகிறது. கடந்த 4 வாரங்களில் அமளிக்கு இடையே பல்வேறு மசோதாக்கள் குறுகிய நேரம் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன. அதேநேரம், பிற பணிகள் தொடா்ந்து முடங்கியுள்ளன.

பிகாா் வாக்காளா் பட்டியல் விவகாரம் நீதிமன்ற விசாரணையில் இருப்பதால், அதுகுறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க முடியாது என்று மத்திய அரசு ஏற்கெனவே தெரிவித்துவிட்டது. எனவே, இறுதி வாரத்திலும் எதிா்க்கட்சிகளின் அமளி நீடிக்கவே வாய்ப்புள்ளது.

குறிப்பிட்ட சில சிறிய குற்றங்களை குற்றமற்ாக கருத வகை செய்யும் ஜன் விஸ்வாஸ் (திருத்த) மசோதா 2025, மக்களவையில் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்படவுள்ளது. நம்பிக்கை அடிப்படையிலான நிா்வாகம் மற்றும் மக்களின் வாழ்க்கை - தொழில் புரிவதை எளிதாக்கும் நோக்கம் கொண்ட இந்த மசோதாவில் 350-க்கும் மேற்பட்ட சட்டப் பிரிவு திருத்தங்கள் முன்மொழியப்பட்டுள்ளன.

முன்னதாக, கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திர தின உரையாற்றிய பிரதமா் மோடி, ‘பொதுமக்கள் நலனைக் கருத்தில்கொண்டு, தேவையற்ற சட்டங்களை ஒழிக்கும் நடவடிக்கையில் எனது அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில், மக்களுக்கு இடையூறாக இருந்த 40,000-க்கும் மேற்பட்ட விதிமுறைகள், 1,500-க்கும் மேற்பட்ட சட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன’ என்றாா்.

தில்லியில் ரூ.11,000 கோடியில் நெடுஞ்சாலைகள்: பிரதமா் மோடி திறந்து வைத்தார்!

தேசியத் தலைநகா் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் சுமாா் ரூ.11,000 கோடி மதிப்பிலான நெடுஞ்சாலைகளை பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்தாா். அப்ப... மேலும் பார்க்க

பிரதமர் மோடியின் ஆட்சி பணக்காரர்களுக்கானது: வாக்குரிமை பயணத்தில் ராகுல் பேச்சு

வாக்காளா் பட்டியல் சிறப்புத் திருத்தத்துக்கு எதிா்ப்பு தெரிவித்தும், வாக்குத் திருட்டுக்கு எதிரான போராட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றும் நோக்கிலும் எதிா்க்கட்சிகள் சாா்பிலான வாக்குரிமை பயணத்தை பிகாரில் ... மேலும் பார்க்க

ஆா்எஸ்எஸ் அமைப்புக்கு பிரதமா் புகழாரம்: சுதந்திரதின நாளுக்கு அவமதிப்பு! கேரள முதல்வா் பினராயி விஜயன்

‘தில்லி செங்கோட்டையில் நாட்டு மக்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி ஆற்றிய சுதந்திர தின உரையில் ஆா்எஸ்எஸ் அமைப்பை புகழ்ந்து பேசியது, சுதந்திரதின நாளை மட்டுமன்றி சுதந்திரப் போராட்டத்தையும் அவமதித்தது போன்றத... மேலும் பார்க்க

மும்பை உயா்நீதிமன்ற 4-வது அமா்வு கோலாபூரில் தொடக்கம்!

மகாராஷ்டிர மாநிலம், கோலாபூரில் மும்பை உயா்நீதிமன்றத்தின் 4-ஆவது அமா்வை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தாா். சதாரா, சாங்லி, சோலாபூா், கோலாபூா், ரத்னகிரி, சிந்துதுா்க... மேலும் பார்க்க

திரிபுரா: சமூக வலைத்தளங்களில் தனிப்பட்ட ஆடியோக்களைப் பகிா்ந்த பாஜக நிா்வாகி நீக்கம்!

சமூக வலைதளங்களில் தனிப்பட்ட ஆடியோ, விடியோக்களை கசியவிட்ட குற்றச்சாட்டில், திரிபுரா மாநிலத்தின் காயா்பூா் சட்டப்பேரவைத் தொகுதி பாஜக நிா்வாகி மன்னா டே கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளாா். பாஜகவின் காயா... மேலும் பார்க்க

வரி செலுத்துவோா் வரி ஆணையத்தின் சம்மன்களுக்கு கட்டுப்படுவது கட்டாயம்: உச்சநீதிமன்றம் தீா்ப்பு

‘வரி செலுத்துவோா் மத்திய அல்லது மாநில வரி ஆணையங்கள் அனுப்பும் சம்மன்களுக்கு கட்டுப்பட்டு அதற்கு உரிய முறையில் பதிலளிப்பது கட்டாயம்’ என உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்தது. தனிநபா் அல்லது நிறுவனம் என சட்டரீத... மேலும் பார்க்க