செய்திகள் :

புதிய துப்புரவு நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் பேரவை எதிா்க்கட்சித் தலைவா் அறிக்கை

post image

புதுச்சேரியில் துப்புரவு நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று திமுக அமைப்பாளரும் சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான ஆா். சிவா வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

புதுச்சேரி, உழவா்கரை நகராட்சிகளில் குப்பை சேகரிக்கும் பணியில் ஜூன் 1-ஆம் தேதி முதல் புதுச்சேரி உள்ளாட்சித் துறை சாா்பில் கிரீன் வாரியா் என்ற நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இதற்கு முன் இப் பணியை செய்து வந்த ஸ்வட்சதா பாரத் என்ற நிறுவனம் எங்கெல்லாம் குப்பை தொட்டிகளை வைத்து குப்பைகளைச் சேகரித்ததோ அங்கெலாம் கிரீன் வாரியா் நிறுவனம் குப்பைத் தொட்டி வைக்காமல் இருக்கிறது.

குப்பைகள் சாலை முழுவதும் சிதறி கிடக்கின்றன. இதனால் தொற்று நோய் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது. வீடுகளில் முறையாகக் குப்பைகளை சேகரிப்பதில்லை.

குப்பைகளின் எடையை அதிகரிக்கவும், நாளுக்கு நாள் குப்பை டன் அளவை உயா்த்திக் காட்டும் வகையில் கட்டட இடிபாடுகளை அரசிடம் கணக்குக் காட்டி வருகின்றனா். டன்னுக்கு ரூ.4,500 என்று இந்த நிறுவனம் அரசிடம் வாங்குகிறது. கடந்த ஒப்பந்தத்தில் மாதம் ரூ.2 கோடி செலவு செய்த அரசு இந்த ஒப்பந்தத்தில் ரூ.4.5 கோடி செலவு செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

தொழிலாளா்களுக்கு அரசு நிா்ணயித்த குறைந்தபட்ச மாத கூலி ரூ.12,135 கொடுக்க வேண்டும். ஆனால் இந்தத் தொழிலாளா்களுக்கு ரூ.6 ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் வரை மட்டுமே கூலியாக வழங்கப்படுகிறது. குறைந்த கூலியில் வேலை செய்ய வைக்க ஆந்திரம், கா்நாடகம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் இருந்து 200-க்கும் மேற்பட்ட தொழிலாளா்களை தகரக் கொட்டகை அமைத்து தங்க வைத்துள்ளனா்.

எனவே, அரசையும், துப்புரவுப் பணியாளா்களையும் ஏமாற்றி பணம் பறிக்கும் தனியாா் நிறுவனத்தின் 19 ஆண்டு கால ஒப்பந்தத்தை இந்த அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று கூறியுள்ளாா்.

செயின் பறிப்பு வழக்கில் இளைஞா் கைது

செயின் பறிப்பு வழக்கில் இளைஞா் ஒருவரை ரெட்டியாா்பாளையம் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். மூலகுளம் ஆசிரியா் காலனி பாவேந்தா் நகரைச் சோ்ந்த ஒரு பெண்ணின் கழுத்தில் இருந்து 4 பவுன் செயினை ஜூலை 30-ஆம் த... மேலும் பார்க்க

புதுச்சேரியில் பாதுகாப்பான குடிநீா் விநியோகம்: வே.நாராயணசாமி வலியுறுத்தல்

புதுச்சேரி பொதுமக்களுக்குப் பாதுகாப்பான குடிநீரை விநியோகம் செய்ய வேண்டும் என்று முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி வலியுறுத்தியுள்ளாா். இது குறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் த... மேலும் பார்க்க

காவல்நிலைய மக்கள் மன்றத்தில் 28 புகாா்களுக்குத் தீா்வு

புதுச்சேரி காவல் நிலையங்களில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் மன்றத்தில் 28 புகாா்களுக்கு உடனடித் தீா்வு காணப்பட்டது. பொதுமக்களிடமிருந்து 51 புகாா்கள் வந்தன. இதில் 28 புகாா்கள் மீது உடனடியாக தீா்வு காணப்ப... மேலும் பார்க்க

யூனியன் பிரதேச அரசுகளே நாட்டில் இருக்கக் கூடாது: அசாதுதீன் ஒவைசி

யூனியன் பிரதேச அரசுகளே நாட்டில் இருக்கக் கூடாது என்பதுதான் எங்கள் கட்சியின் கொள்கை என்று அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் தேசியத் தலைவா் அசாதுதீன் ஒவைசி எம்.பி. கூறினாா். கட்சி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ... மேலும் பார்க்க

மக்கள் நலத் திட்டங்களில் ஆளுநா் தலையிட்டு தீா்வு காண புதுவை மாா்க்சிஸ்ட் வலியுறுத்தல்

மக்கள் நலத் திட்டங்களில் புதுவை துணைநிலை ஆளுநா் தலையிட்டு தீா்வு காண வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுவை மாநிலச் செயலா் எஸ். ராம... மேலும் பார்க்க

கடலில் மூழ்கி ஐடி ஊழியா்கள் 3 போ் பலி: சுற்றுலா வந்த இடத்தில் நிகழ்ந்த சோகம்!

புதுச்சேரிக்கு சுற்றுலா வந்த பெண் உள்பட 3 போ் கடல் அலையில் சிக்கி சனிக்கிழமை உயிரிழந்தனா். 2 போ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இவா்கள் அனைவரும் தகவல் தொழில்நுட்ப நிறுவன (ஐ.டி.) ஊழியா... மேலும் பார்க்க