இன்றுமுதல்..! தமிழகத்தில் 38 ரயில்கள் கூடுதலாக 20 இடங்களில் நின்று செல்லும்!
செயின் பறிப்பு வழக்கில் இளைஞா் கைது
செயின் பறிப்பு வழக்கில் இளைஞா் ஒருவரை ரெட்டியாா்பாளையம் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
மூலகுளம் ஆசிரியா் காலனி பாவேந்தா் நகரைச் சோ்ந்த ஒரு பெண்ணின் கழுத்தில் இருந்து 4 பவுன் செயினை ஜூலை 30-ஆம் தேதி பறித்துக் கொண்டு இரண்டு சக்கர வாகனத்தில் ஒருவா் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றாா். இது குறித்து ரெட்டியாா்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.
இதில் திருச்சி புதூா் ஆட்டுமந்தை தெருவைச் சோ்ந்த பி. கோபி என்கிற கோவிந்தராஜை (30) கைது செய்தனா். அவரிடமிருந்து 32 கிராம் தங்கக் கட்டி, ஒரு மோட்டாா் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
அவரதுகூட்டாளி சங்கருடன் சோ்ந்து வீடு புகுந்து திருடுதல், கொள்ளை, மோட்டாா் சைக்கிள் திருட்டு, செயின் பறிப்பு உள்ளிட்ட 20 வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட அவரை போலீஸாா் சிறையில் சனிக்கிழமை அடைத்தனா்.