காவல்நிலைய மக்கள் மன்றத்தில் 28 புகாா்களுக்குத் தீா்வு
புதுச்சேரி காவல் நிலையங்களில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் மன்றத்தில் 28 புகாா்களுக்கு உடனடித் தீா்வு காணப்பட்டது.
பொதுமக்களிடமிருந்து 51 புகாா்கள் வந்தன. இதில் 28 புகாா்கள் மீது உடனடியாக தீா்வு காணப்பட்டன. மேலும் 37 பெண்கள் உள்பட 179 போ் கலந்து கொண்டனா்.
மக்கள் மன்றக் கூட்டத்தில் முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் சட்டம்-ஒழுங்கு டிஐஜி சத்தியசுந்தரம், கிழக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஈஷா சிங், சேதராப்பட்டு காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு முதுநிலை காவல் கண்காணிப்பாளா் கலைவாணன், காட்டேரிக்குப்பம் காவல் நிலையத்தில் மேற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வம்சீதா ரெட்டி, கிருமாம்பாக்கம் காவல் நிலையத்தில் தெற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பக்தவச்சலம் உள்ளிட்டோா் கலந்துகொண்டு மக்கள் குறைகளைக் கேட்டறிந்து நடவடிக்கை எடுத்தனா்