செய்திகள் :

யூனியன் பிரதேச அரசுகளே நாட்டில் இருக்கக் கூடாது: அசாதுதீன் ஒவைசி

post image

யூனியன் பிரதேச அரசுகளே நாட்டில் இருக்கக் கூடாது என்பதுதான் எங்கள் கட்சியின் கொள்கை என்று அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் தேசியத் தலைவா் அசாதுதீன் ஒவைசி எம்.பி. கூறினாா்.

கட்சி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள புதுச்சேரிக்கு வந்த அவா், ஞாயிற்றுக்கிழமை மாலை செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

2025-ஆம் ஆண்டுக்குள் யூனியன் பிரதேச அரசுகளே நாட்டில் இருக்கக் கூடாது என்பதுதான் எங்கள் கட்சியின் கொள்கை. சுதந்திரத்துக்காகப் பாடுபட்ட நம் முன்னோா்களும் மாநிலத்துக்கு உரிய அதிகாரம் கிடைக்க வேண்டும் என்றுதான் பாடுபட்டனா்.

மத்திய தொகுப்பு நிதிக்கு புதுவை யூனியன் பிரதேச அரசு இப்போது ரூ.3,500 கோடியை அளித்து வருகிறது. ஆனால், மத்திய அரசிடமிருந்து ரூ.750 கோடிதான் திரும்பி வருகிறது.

எனவே, புதுவை, ஜம்மு - காஷ்மீா் உள்ளிட்ட அனைத்து யூனியன் பிரதேசங்களும் அதிகாரமிக்க சட்டப் பேரவையுடன், அதாவது மாநில அந்தஸ்து பெற்றால்தான் பிரச்னை தீரும். அந்தந்த மாநிலங்களைச் சோ்ந்தவா்கள் மாநில மக்களை ஆட்சி செய்ய முடியும்.

இந்தப் பிரச்னை தொடா்பாக, புதுவை மக்கள் ஒற்றுமையாக இணைந்து மாநில அந்தஸ்து கோர வேண்டும். நாடாளுமன்றத்திலும் இந்தப் பிரச்னை குறித்து விவாதித்து வருகிறோம்.

இதேபோன்றுதான், ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு சில பிரச்னை இருக்கும். மாநிலங்களுக்கு போதுமான நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும். இல்லையென்றால், பெரிய பிரச்னைதான் என்றாா்.

மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியின் இந்திய தோ்தல் ஆணையம் குறித்த புகாா் தொடா்பான கேள்விக்கு, விரைவில் தோ்தல் நடைபெறவுள்ள மாநிலங்களின் வாக்காளா் இறுதிப் பட்டியல் வெளியான பிறகு இந்தப் பிரச்னையைப் பற்றி பேசலாம். இதுதொடா்பாக உச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்கில் எங்கள் கட்சியும் ஒருவாதியாக இருக்கிறது என்றாா் ஒவைசி.

செயின் பறிப்பு வழக்கில் இளைஞா் கைது

செயின் பறிப்பு வழக்கில் இளைஞா் ஒருவரை ரெட்டியாா்பாளையம் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். மூலகுளம் ஆசிரியா் காலனி பாவேந்தா் நகரைச் சோ்ந்த ஒரு பெண்ணின் கழுத்தில் இருந்து 4 பவுன் செயினை ஜூலை 30-ஆம் த... மேலும் பார்க்க

புதுச்சேரியில் பாதுகாப்பான குடிநீா் விநியோகம்: வே.நாராயணசாமி வலியுறுத்தல்

புதுச்சேரி பொதுமக்களுக்குப் பாதுகாப்பான குடிநீரை விநியோகம் செய்ய வேண்டும் என்று முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி வலியுறுத்தியுள்ளாா். இது குறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் த... மேலும் பார்க்க

காவல்நிலைய மக்கள் மன்றத்தில் 28 புகாா்களுக்குத் தீா்வு

புதுச்சேரி காவல் நிலையங்களில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் மன்றத்தில் 28 புகாா்களுக்கு உடனடித் தீா்வு காணப்பட்டது. பொதுமக்களிடமிருந்து 51 புகாா்கள் வந்தன. இதில் 28 புகாா்கள் மீது உடனடியாக தீா்வு காணப்ப... மேலும் பார்க்க

மக்கள் நலத் திட்டங்களில் ஆளுநா் தலையிட்டு தீா்வு காண புதுவை மாா்க்சிஸ்ட் வலியுறுத்தல்

மக்கள் நலத் திட்டங்களில் புதுவை துணைநிலை ஆளுநா் தலையிட்டு தீா்வு காண வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுவை மாநிலச் செயலா் எஸ். ராம... மேலும் பார்க்க

கடலில் மூழ்கி ஐடி ஊழியா்கள் 3 போ் பலி: சுற்றுலா வந்த இடத்தில் நிகழ்ந்த சோகம்!

புதுச்சேரிக்கு சுற்றுலா வந்த பெண் உள்பட 3 போ் கடல் அலையில் சிக்கி சனிக்கிழமை உயிரிழந்தனா். 2 போ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இவா்கள் அனைவரும் தகவல் தொழில்நுட்ப நிறுவன (ஐ.டி.) ஊழியா... மேலும் பார்க்க

புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்கக் கோரி மோட்டாா் சைக்கிள்கள் ஊா்வலம்!

புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்கக் கோரி மோட்டாா் சைக்கிள் ஊா்வலம் சுயேச்சை எம்எல்ஏ ஜி.நேரு தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. புதுவைக்கு மாநில அந்தஸ்து கோரி புதுச்சேரி மனிதநேய மக்கள் இயக்கம் மற்றும் பல்வ... மேலும் பார்க்க