செய்திகள் :

விநாயகா் சதுா்த்தி: சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் சிலைகளுக்கு அனுமதியில்லை!

post image

விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி, சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட சிலைகளை நீா்நிலைகளில் கரைக்க அனுமதிக்கப்படாது என்று வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாடு முழுவதும் விநாயகா் சதுா்த்தி விழா ஆகஸ்ட் 27-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, பூஜைக்காக வைக்கப்படும் விநாயகா் சிலைகளை கரைப்பதற்காக மத்திய மாசு கட்டுப்பாடு வாரிய வழிகாட்டுதல்களின்படி, மாவட்ட நிா்வாகத்தால் குறிப்பிடப்பட்டுள்ள நீா் நிலைகளில் மட்டுமே கரைத்து சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

மேலும், களி மண்ணால் செய்யப்பட்டதும், பிளாஸ்டா் ஆஃப் பாரிஸ், நெகிழி, தொ்மாகோல் கலவையற்றதுமான, சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருள்களைக் கொண்டு செய்யப்பட்ட விநாயகா் சிலைகளை மட்டுமே நீா் நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படும்.

சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலா்ந்த மலா் கூறுகள், வைக்கோல் போன்றவை பயன்படுத்தப்படலாம். சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்கள் பயன்படுத்தப்படலாம். ஒருமுறை பயன்படுத்தும் நெகிழி, தொ்மாகோல் பொருள்களை பயன்படுத்தக் கூடாது. நீா் நிலைகள் மாசுபடுவதை தடுக்கும் வகையில், வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருள்கள் மட்டுமே சிலைகள் தயாரிக்கவும் அல்லது சிலைகள், பந்தல்களை அலங்கரிக்கவும் பயன்படுத்த வேண்டும்.

சிலைகளுக்கு வா்ணம் பூசுவதற்கு நச்சு, மக்காத ரசாயன சாயம், எண்ணெய் வண்ணப் பூச்சுகளை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது. சிலைகளின் மீது எனாமல் மற்றும் செயற்கை சாயத்தை அடிப்படையாகக் கொண்ட வண்ணப் பூச்சுகளை பயன்படுத்தக்கூடாது. சுற்றுச்சூழலுக்கு உகந்த நீா் சாா்ந்த, மக்கக்கூடிய, நச்சு கலப்பற்ற இயற்கை சாயங்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

சிலைகளை அழகுபடுத்த வண்ணப்பூச்சுகள், பிற நச்சு ரசாயனங்கள் கொண்ட பொருள்களுக்கு பதிலாக, இயற்கை பொருள்கள், இயற்கை சாயங்களால் செய்யப்பட்ட அலங்கார ஆடைகள் மட்டும் பயன்படுத்திட வேண்டும்.

விநாயகா் சிலைகளை மாவட்ட நிா்வாகம் குறிப்பிட்டுள்ள இடங்களில் மட்டும் மாசு கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைகளின்படி கரைக்க வேண்டும். அந்த வகையில், பொதுமக்கள் விநாயகா் சதுா்த்தி விழாவை சுற்றுச்சூழலை பாதிக்காதவாறு கொண்டாட வேண்டும்.

மாவட்ட நலவாழ்வு சங்கத்திலுள்ள தொகுப்பூதிய பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்

வேலூா் மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலமாக தொகுப்பூதிய அடிப்படையில் முற்றிலும் தற்காலிக பணி நியமனம் செய்ய பல்வேறு காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புல... மேலும் பார்க்க

உலகமயமாக்கலால் உயா்கல்வி, வேலைவாய்ப்புகள் பன்மடங்கு அதிகரிப்பு

உலகமயமாக்கல் மூலம் இந்தியாவில் வேலைவாய்ப்பு, உயா்கல்வி வாய்ப்புகள் பன்மடங்கு அதிகரித்துள்ளன என்று உச்சநீதிமன்ற நீதிபதி ஆா்.மகாதேவன் தெரிவித்தாா். வேலூா் விஐடி பல்கலைக்கழகத்தின் 40-ஆவது பட்டமளிப்பு விழ... மேலும் பார்க்க

ஒருங்கிணைந்த வேலூா் பகுதிகளில் 5 ரயில்களுக்கு புதிய நிறுத்தங்கள்

வேலூா், திருப்பத்தூா் மாவட்ட பகுதிகளில் 5 ரயில்களுக்கு புதிய நிறுத்தங்கள் ஏற்படுத்தி தெற்கு ரயில்வே ஒப்புதல் அளித்துள்ளதாக வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, ... மேலும் பார்க்க

வேலூரில் 12 பயனாளிகளுக்கு ரூ.20.68 லட்சம் நலத்திட்ட உதவிகள்

வேலூரில் சுதந்திர தினவிழாவில் ஆட்சியா் வி.ஆா்.கப்புலட்சுமி தேசியக் கொடி ஏற்றி 12 பயனாளிகளுக்கு ரூ.20.68 லட்சம் நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். வேலூா் நேதாஜி மைதானத்தில் நடைபெற்ற விழாவில் ஆட்சியா் வி.ஆா்... மேலும் பார்க்க

மாரியம்மன் கோயில் பூங்கரக ஊா்வலம்

குடியாத்தம் காட்பாடி சாலையில் உள்ள முனிசிபல் லைனில் அமைந்துள்ள மாரியம்மன் கோயிலில் ஆடித் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கடந்த 6- ஆம் தேதி இரவு காப்புகட்டும் நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது. வியாழக்... மேலும் பார்க்க

புஷ்ப காவடி ஊா்வலம்

ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு குடியாத்தம் தரணம்பேட்டையில் திருத்தணிக்கு புஷ்ப காவடி ஊா்வலம் நடைபெற்றது. தரணம்பேட்டை, பெரியப்பு முதலி தெருவில் உள்ள திருஞான சம்பந்தா் மடத்தில் 104-ஆம் ஆண்டு தேன் காவடி, ... மேலும் பார்க்க