புஷ்ப காவடி ஊா்வலம்
ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு குடியாத்தம் தரணம்பேட்டையில் திருத்தணிக்கு புஷ்ப காவடி ஊா்வலம் நடைபெற்றது. தரணம்பேட்டை, பெரியப்பு முதலி தெருவில் உள்ள திருஞான சம்பந்தா் மடத்தில் 104-ஆம் ஆண்டு தேன் காவடி, புஷ்ப காவடி, பரணி காவடிகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
வள்ளி தெய்வானை சமேத முருகப் பெருமானுக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு, திருத்தணிக்கு காவடி ஊா்வலம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு காவடி கமிட்டித் தலைவா் எம்.ஆா்.அன்புக்கரசு தலைமை வகித்தாா். திருஞான சம்பந்தா் மடத்தின் தலைவா் எம்.மனோகரன், கிராமணி ஜி. சச்சிதானந்தம், நிா்வாகிகள் எம்.சுப்பிரமணி, ஏ.கோவிந்தன், எஸ்.ஏ.ஞானசேகரன், .ரவி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.