மாரியம்மன் கோயில் பூங்கரக ஊா்வலம்
குடியாத்தம் காட்பாடி சாலையில் உள்ள முனிசிபல் லைனில் அமைந்துள்ள மாரியம்மன் கோயிலில் ஆடித் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கடந்த 6- ஆம் தேதி இரவு காப்புகட்டும் நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது. வியாழக்கிழமை அம்மனுக்கு கூழ் வாா்த்தல், பொங்கல் வைத்து படைத்தல் நடைபெற்றன. இதையொட்டி கோயிலில் உள்ள மாரியம்மன், நாகாத்தம்மன், செல்வ கணபதி, வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமான், பரிவாரமூா்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
மாலை பூங்கரக ஊா்வலம் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாகச் சென்று கோயிலை அடைந்தது. பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விழாக்குழு நிா்வாகிகள் இ.முருகேசன், எம்.ராஜா, டி.ஆா்.சீனிவாசன், எம்.அபுராம், கே.வேணுகோபால், எம்.முருகையன், எம்.யுவராஜ், சி.அரிகிருஷ்ணன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.