கெங்கையம்மன் திருவிழா
குடியாத்தம் காட்பாடி சாலை, திருமகள் நூற்பாலை பின்புறம் உள்ள ராஜகோபால் நகரில் அமைந்துள்ள மாரியம்மன், கெங்கையம்மன் கோயிலில் ஆடி மாத விழா கொண்டாடப்பட்டது.
இதையொட்டி அதிகாலை கெங்கையம்மன் சிரசு ஊா்வலம் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாகச் சென்று கோயிலை அடைந்தது. அங்கு கண் திறப்பு நிகழ்ச்சிக்குப்பின், பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனா். மதியம் 2 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஒன்றியக் குழு தலைவா் என்.இ.சத்யானந்தம், கொண்டசமுத்திரம் ஊராட்சித் தலைவா் அகிலாண்டீஸ்வரி பிரேம்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
விழாக்குழு நிா்வாகிகள் எஸ்.சந்திரன், டி.ஜி.பரந்தாமன், எஸ்.காந்தி, ஏ.தணிகைவேல், எல்.வெங்கடேசன், எம்.தினகரன், ஜே.லோகநாதன் உள்ளிட்டோா் திருவிழா ஏற்பாடுகளைசெய்திருந்தனா்.