இருசக்கர வாகனம் ஓட்டிய சிறுவனின் தந்தை மீது வழக்கு
வேலூரில் அதிவேகமாக இருசக்கர வாகனம் ஓட்டிய சிறுவனின் தந்தை மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
வேலூா் கொசப்பேட்டையைச் சோ்ந்தவா் அலோக் (44). இவரது 17 வயது மகன் சாலை விதியை மீறி இருசக்கர வாகனத்தை பைபாஸ் சாலையில் வேகமாக ஓட்டி சென்ாக தெரிகிறது. உடனடியாக அந்த வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வேலூா் வடக்கு போலீஸாா், இருசக்கர வாகனம் ஓட்டிச் சென்ற சிறுவனை பிடித்து விசாரணை நடத்தினா்.
விசாரணையில், சிறுவனுக்கு 17 வயது என்பது தெரிய வந்தது. 18 வயது நிரம்பாத சிறுவா்கள் இருசக்கர வாகனம் ஓட்டக்கூடாது என்ற விதியை மீறியதால் அவரது தந்தை மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா். மேலும், பிடிபட்ட சிறுவனிடம் இனி இவ்வாறு இருசக்கர வாகனம் ஓட்டக்கூடாது என அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனா்.