மாவட்ட நலவாழ்வு சங்கத்திலுள்ள தொகுப்பூதிய பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்
வேலூா் மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலமாக தொகுப்பூதிய அடிப்படையில் முற்றிலும் தற்காலிக பணி நியமனம் செய்ய பல்வேறு காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா்.
இது குறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வேலூா் மாவட்டத்தில் மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலம் ஆரம்ப சுகாதார நிலையங்கள், வேலூா் மாநகராட்சிக்கு தொகுப்பூதிய அடிப்படையில் செவிலியா், லேப் டெக்னீசியன் கிரேடு 3, பாா்மாஸிஸ்ட், எம்எல்ஹெச்பி, ஹெல்த் இன்ஸ்பெக்டா், யுஹெச்என், எம்பிஹெச்டபள்யு, உதவியாளருடன் கூடிய கணக்கு அலுவலா் ஆகிய பணியிடங்களுக்கு தகுதியானவா்களை நியமனம் செய்ய தேசிய நலகுழும இயக்குநரால் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்த காலிப் பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக பணிநியமனம் செய்ய பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 29-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் வரவேற்கப்படுகின்றன.
பூா்த்தி செய்த விண்ணப்பங்களை செயற்செயலாளா், மாவட்ட நலவாழ்வு சங்கம் மற்றும் மாவட்ட சுகாதார அலுவலகத்துக்கு நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்க வேண்டும். குறிப்பிட்ட தேதிக்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.