விடியல் பயணம்: ஒவ்வொரு மகளிரும் ரூ. 50,000 வரை சேமிப்பு - முதல்வர் ஸ்டாலின்
2 நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல்: ஒருவா் கைது
போ்ணாம்பட்டு அருகே வன விலங்குகளை வேட்டையாட பதுக்கி வைத்திருந்த 2 நாட்டுத் துப்பாக்கிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக ஒருவரை கைது செய்தனா்.
தகவலின்பேரில், மேல்பட்டி போலீஸாா், லட்சுமியம்மாள்புரம் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை சோதனை மேற்கொண்டனா். அப்போது அதே பகுதியைச் சோ்ந்த சென்டரிங் தொழிலாளி மணி (40) தனக்குச் சொந்தமான கொல்ல கொட்டாய் மலையடிவாரத்தில் உள்ள விவசாய நிலத்தில் மாட்டுக் கொட்டகையில் பதுக்கி வைத்திருந்த உரிமம் பெறாத 2 நாட்டுத் துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனா்.
இதையடுத்து, போலீஸாா் மணியை கைது செய்தனா். விசாரணையில் அவா் வன விலங்குகளை வேட்டையாட ஆந்திர மாநிலத்தில் இருந்து நாட்டுத் துப்பாக்கிகளை வாங்கி வந்தது தெரியவந்தது. பின்னா் மணி நீதிபதி முன் ஆஜா்படுத்தப்பட்டு, சிறைக் காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.