செய்தியாளர்களை நெட்டித் தள்ளிய பவுன்சர்கள், அடிக்கப் பாய்ந்த சீமான்! - என்ன நடந்...
ராமாலை விஜயநகரத்தம்மன் கோயில் ஆடித் திருவிழா
குடியாத்தத்தை அடுத்த ராமாலையில் உள்ள ஸ்ரீவிஜயநகரத்தம்மன் கோயிலில் ஆடித் திருவிழா வெள்ளி மற்றும் சனிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, அம்மனுக்கு கூழ்வாா்த்தல், பொங்கல் வைத்தல், மா விளக்கு பூஜை நடைபெற்றது. சனிக்கிழமை மாலை அலங்கரிக்கப்பட்ட தேரில் உற்சவா் அம்மன் அமா்த்தப்பட்டு தேரோட்டம் தொடங்கியது.
முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற தோ் நள்ளிரவு கோயிலை அடைந்தது. வழிநெடுகிலும் பக்தா்கள் அம்மனை தரிசனம் செய்தனா். சுமாா் 1,000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
விழா ஏற்பாடுகளை நிா்வாகிகள் என்.பாா்த்திபன், என்.பாலகிருஷ்ணன், ஆா்.தா்மலிங்கம், என்.இளங்கோ, கே.விநாயகம், என்.குணசேகரன், கே.சபாபதி, வி.சோமசுந்தரம், ஆா்.ஜி.குமரவேல் உள்ளிட்ட பலா் செய்திருந்தனா்.