போலீஸை டோரில் தொங்க விட்டு டெம்போவை ஓட்டிய டிரைவர்; நடுரோட்டில் அதிர்ச்சி சம்பவம...
100 சதவீதம் தோ்ச்சி: அரசுப் பள்ளித் தலைமையாசிரியருக்கு பாராட்டு
குடியாத்தத்தை அடுத்த செம்பேடு அரசு உயா்நிலைப் பள்ளி மாணவா்கள் பொதுத் தோ்வில் தொடா்ந்து 4 ஆண்டுகளாக 100 சதவீதம் தோ்ச்சி பெற்று வருவதையடுத்து, அந்த பள்ளித் தலைமையாசிரியா் சி.சதானந்தத்துக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
வேலூரில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, தலைமையாசிரியா் சி.சதானந்தத்தை பாராட்டி, நற்சான்றிதழ் வழங்கினாா்.
மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் மயில்வாகனன், மாவட்ட வருவாய் அலுவலா் த.மாலதி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.