Serial Update: அமெரிக்கா செல்லும் கனிகா; `கயல்’க்கு இனி புது சகோதரர்; கம் பேக் க...
அடுத்த 3 மணி நேரத்துக்கு இந்த 5 மாவட்டங்களில் மழை பெய்யும்!
அடுத்த 3 மணி நேரத்துக்கு தமிழகத்தில் நீலகிரி, கோவை உள்பட 5 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று(ஆக. 18) நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்துக்கு (மாலை 4 மணி வரை) தமிழகத்தின் நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
