செய்திகள் :

டிரம்ப் - புதின் - ஸெலன்ஸ்கி பேச்சு: உலகளவில் நடக்கும் மிகப்பெரிய விளையாட்டு! -நரவனே

post image

ரஷியா - உக்ரைன் போர் நிறுத்த பேச்சுவார்த்தை என்பது உலகளவில் நடைபெறும் மிகப்பெரிய விளையாட்டு என்று இந்திய முன்னாள் முப்படைகள் தளபதி எம்எம் நரவனே தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷியா அதிபர் விளாதிமீர் புதினின் சந்திப்புக்கு பிறகு, ரஷியா - உக்ரைன் போர் நிறுத்த விவகாரம் தீவிரமடைந்துள்ளது.

கடந்த வாரம் அமெரிக்காவின் அலஸ்காவுக்கு சென்ற புதின், டிரம்ப்பை நேரில் சந்தித்து போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இந்த பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை என்றாலும், முன்னேற்றம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், ஐரோப்பிய நாட்டு தலைவர்களுடன் அமெரிக்காவுக்கு சென்றுள்ள உக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கி, வெள்ளை மாளிகையில் டிரம்ப்புடன் திங்கள்கிழமை பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

இதுதொடர்பாக புணேவில் நடைபெற்ற நிகழ்வில் நரவனே பேசியதாவது:

”டிரம்ப் - புதின் சந்திப்பு கலவையான முடிவுகளுடன் நிறைவடைந்தது. இருவருக்கும் இடையே மறைமுகமாக நடந்திருக்கக்கூடிய விஷயங்களில் ஐரோப்பிய நாடுகளுக்கு மகிழ்ச்சியில்லை.

ஸெலன்ஸ்கி - டிரம்ப் இடையே சந்திப்பு இருக்கிறது. ஐரோப்பிய நாடுகளின் பல பிரதமர்களுடன் அமெரிக்காவுக்கு ஸெலன்ஸ்கி சென்றுள்ளார். ஐரோப்பிய நாடுகளுக்கு நலன் இல்லாத எவ்வித மறைமுக ஒப்பந்தமும் டிரம்ப் - புதின் இடையே இருக்கக்கூடாது என்று அவர்கள் கவலையில் உள்ளார்கள்.

இது உலகளவில் விளையாடப்படும் மிகப்பெரிய விளையாட்டு. என்ன நடக்கும் என்பதை நம்மால் சொல்ல முடியாது. சக்திவாய்ந்த நாடாக இருப்பதால், பலத்தை ஒருதலைபட்சமாக பயன்படுத்தி எல்லைகளை மாற்ற அனுமதிக்கிறீகளா என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். இந்தியா அதற்கு எப்போதும் எதிராக உள்ளது.

மோதல்களை பலத்தால் அல்லாமல், பேச்சுவார்த்தை மற்றும் விவாதங்கள் மூலம் தீர்க்க வேண்டும் என்று இந்தியா எப்போதும் கூறி வருகிறது. அதனால்தான் நமது பிரதமர், ‘இது போரின் சகாப்தம் அல்ல, போர் கடைசி முயற்சியாகவே இருக்க வேண்டும்’ எனக் கூறி வருகிறார்” எனத் தெரிவித்தார்.

Former Indian Army Chief MM Naravane has said that the Russia-Ukraine ceasefire talks are the biggest game in the world.

இதையும் படிக்க : உக்ரைனுக்கு நேட்டோவில் இடமில்லை! டிரம்ப் அறிவிப்பு

பிரதமர் மோடியுடன் சி.பி. ராதாகிருஷ்ணன் சந்திப்பு!

தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.நாட்டின் 14-ஆவது குடியரசு துணைத் தலைவரான ஜகதீப் தன்கா் ராஜிநாமா செய்ததை அடுத... மேலும் பார்க்க

மும்பையில் 3வது நாளாக தொடரும் கனமழை: சிவப்பு எச்சரிக்கை!

மகாராஷ்டிர மாநிலத்தின் மும்பை அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து மூன்றாவது நாளாக கனமழை பெய்து வருவதால் பல்வேறு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. மும்பை கடந... மேலும் பார்க்க

அமெரிக்க பொண்ணு - இந்திய பையன்! காதலா, நிச்சயித்த திருமணமா? வைரலான விடியோ

அமெரிக்கப் பெண்ணை திருமணம் செய்த இந்திய இளைஞர், காதல் திருமணமா? பெற்றவர்கள் நிச்சயித்த திருமணமா? என்பது குறித்த கேள்விக்கு அளித்த ருசிகர பதில் வைரலாகியிருக்கிறது.திருமணம் என்பது, இந்தியா மற்றும் அமெரி... மேலும் பார்க்க

அமெரிக்க கண்காணிப்பில் இந்தியா, பாகிஸ்தான்! வெளியுறவு அமைச்சர்

இந்தியாவையும் பாகிஸ்தானையும் தொடர் கண்காணிப்பில் வைத்திருப்பதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்க்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.போர் நிறுத்தங்கள் குறித்து அமெரிக்க ஊடகத்துக்கு மார்க்கோ ரூபியோ அளித்த பேட்... மேலும் பார்க்க

ராம்பனில் நிலச்சரிவு: ஜம்மு- ஸ்ரீநகர் நெடுஞ்சாலை மூடல்!

ஜம்மு-காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் உள்ள முக்கிய சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டதையடுத்து ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை திங்கள்கிழமை அதிகாலை முதல் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்... மேலும் பார்க்க

தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிராக பதவி நீக்கத் தீர்மானம்: எதிர்க்கட்சிகள் முடிவு?

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் பதவி நீக்க தீர்மானத்தைக் கொண்டு வர இந்தியா கூட்டணிக் கட்சிகள் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிகாரில் தேர்தல் ஆண... மேலும் பார்க்க