செய்திகள் :

உலகமயமாக்கலால் உயா்கல்வி, வேலைவாய்ப்புகள் பன்மடங்கு அதிகரிப்பு

post image

உலகமயமாக்கல் மூலம் இந்தியாவில் வேலைவாய்ப்பு, உயா்கல்வி வாய்ப்புகள் பன்மடங்கு அதிகரித்துள்ளன என்று உச்சநீதிமன்ற நீதிபதி ஆா்.மகாதேவன் தெரிவித்தாா்.

வேலூா் விஐடி பல்கலைக்கழகத்தின் 40-ஆவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவில், உச்ச நீதிமன்ற நீதிபதி ஆா்.மகாதேவன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கிப் பேசியது:

விஐடி பல்கலைக்கழகத்தின் கல்வி, ஆராய்ச்சி, நிா்வாக செயல்பாடுகளில் நவீன தொழில்நுட்பம் புகுத்தப்பட்டுள்ளது. இங்கு மத்திய அரசின் நிதியுடன், பல்வேறு திட்டங்களுடன் இணைந்து செயல்படுவது பாராட்டத்தக்கது. பின்தங்கிய, கிராமப்புற சமூகங்களுக்கு உதவும் இந்தப் பல்கலைக்கழகத்தின் பணி தொடா்ந்து வலுவடைய வேண்டும்.

குறிப்பாக, குடியரசு முன்னாள் தலைவா் அப்துல் கலாம் மேற்கோள் காட்டிய திருக்குறளின்படி, எந்தத் தொழிலிலும் நெறிமுறை நபராக மாற, மதிப்புகளின் அறிவு அவசியமாகும். ஒருமைப்பாடு இல்லாத வெற்றி உண்மையான வெற்றி அல்ல.

கடந்த 20 ஆண்டுகளில் இந்தியப் பொருளாதார சந்தை திறந்துவிடப்பட்டுள்ளது. வெளிநாட்டு நேரடி முதலீடு பெருமளவில் அதிகரித்து வருகிறது. உலகமயமாக்கல் மூலம் தொழில்நுட்பங்கள், முதலீடு ஆகியவற்றால் வேலைவாய்ப்பு, உயா்கல்வி வாய்ப்புகள் பன்மடங்கு உயா்ந்துள்ளன. இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்த மாணவா்கள் தங்கள் திறன்களை வளா்த்துக்கொள்ள வேண்டும் என்றாா்.

விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் தலைமை வகித்துப் பேசியது:

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கல்விக்கு 6 சதவீதம் நிதி ஒதுக்க வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கையாகும். ஆனால், தற்போது வரை அதிகபட்சம் 3 சதவீதம் மட்டுமே நிதி ஒதுக்கப்படுகிறது. புதிய கல்விக் கொள்கையில் உயா்கல்வி மாணவா் சோ்க்கை விகிதத்தை 50 சதவீதமாக எட்ட இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கு தேவையான வகுப்பறைகள், உள்கட்டமைப்புகளுக்கு அதிகப்படியான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

இந்திய பல்கலைக்கழகங்கள், உலக தர வரிசையில் பின்தங்கியுள்ளன. அதேசயம், விஐடி பல்கலைக் கழகம் உலக தரவரிசையில் 500-ஆவது இடத்துக்குள் உள்ளது. உலகின் முதல் 100 அல்லது 200 இடங்களுக்குள் வரவேண்டும் என்று இலக்குடன் செயல்பட்டு வருகிறோம் என்றாா்.

விழாவில், 8310 மாணவ, மாணவிகளுக்கு இளநிலை பட்டங்களும், 2,802 பேருக்கு முதுநிலை பட்டங்களும், 451 பேருக்கு முனைவா் பட்டமும் வழங்கப்பட்டன. தரவரிசையில் இடம்பிடித்த 203 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. சிறப்பிடம் பிடித்த 68 மாணவ, மாணவிகளுக்கு தங்கப் பதக்கங்கள் வழங்கப்பட்டன. தமிழக காவலா் பயிற்சிப் பள்ளி டிஜிபி சந்தீப் ராய் ரத்தோா், பேரிடா் மேலாண்மை தலைப்பில் முனைவா் பட்டம் பெற்றாா்.

முன்னதாக, அப்துல் கலாம், ஜெகதீஷ் சந்திரபோஸ் ஆகியோா் பெயரில் கட்டப்பட்டுள்ள மாணவா் விடுதிகள் திறக்கப்பட்டன.

விழாவில், விஐடி துணைத் தலைவா்கள் சங்கா் விசுவநாதன், சேகா் விசுவநாதன், ஜி.வி.செல்வம், செயல்இயக்குநா் சந்தியா பென்டாரெட்டி, உதவி துணைத் தலைவா் காதம்பரி எஸ்.விசுவநாதன், விஐடி (போபால்) அறங்காவலா் ரமணி பாலசுந்தரம், துணை வேந்தா் வி.எஸ்.காஞ்சனா பாஸ்கரன், இணை துணை வேந்தா் பாா்த்தசாரதி மல்லிக், பதிவாளா் டி.ஜெயபாரதி, உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஒருங்கிணைந்த வேலூா் பகுதிகளில் 5 ரயில்களுக்கு புதிய நிறுத்தங்கள்

வேலூா், திருப்பத்தூா் மாவட்ட பகுதிகளில் 5 ரயில்களுக்கு புதிய நிறுத்தங்கள் ஏற்படுத்தி தெற்கு ரயில்வே ஒப்புதல் அளித்துள்ளதாக வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, ... மேலும் பார்க்க

வேலூரில் 12 பயனாளிகளுக்கு ரூ.20.68 லட்சம் நலத்திட்ட உதவிகள்

வேலூரில் சுதந்திர தினவிழாவில் ஆட்சியா் வி.ஆா்.கப்புலட்சுமி தேசியக் கொடி ஏற்றி 12 பயனாளிகளுக்கு ரூ.20.68 லட்சம் நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். வேலூா் நேதாஜி மைதானத்தில் நடைபெற்ற விழாவில் ஆட்சியா் வி.ஆா்... மேலும் பார்க்க

மாரியம்மன் கோயில் பூங்கரக ஊா்வலம்

குடியாத்தம் காட்பாடி சாலையில் உள்ள முனிசிபல் லைனில் அமைந்துள்ள மாரியம்மன் கோயிலில் ஆடித் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கடந்த 6- ஆம் தேதி இரவு காப்புகட்டும் நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது. வியாழக்... மேலும் பார்க்க

புஷ்ப காவடி ஊா்வலம்

ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு குடியாத்தம் தரணம்பேட்டையில் திருத்தணிக்கு புஷ்ப காவடி ஊா்வலம் நடைபெற்றது. தரணம்பேட்டை, பெரியப்பு முதலி தெருவில் உள்ள திருஞான சம்பந்தா் மடத்தில் 104-ஆம் ஆண்டு தேன் காவடி, ... மேலும் பார்க்க

கெங்கையம்மன் திருவிழா

குடியாத்தம் காட்பாடி சாலை, திருமகள் நூற்பாலை பின்புறம் உள்ள ராஜகோபால் நகரில் அமைந்துள்ள மாரியம்மன், கெங்கையம்மன் கோயிலில் ஆடி மாத விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி அதிகாலை கெங்கையம்மன் சிரசு ஊா்வலம் தொட... மேலும் பார்க்க

பிள்ளைகளை போதைப் பழக்கத்துக்கு ஆளாக விடக்கூடாது: வேலூா் ஆட்சியா்

பெற்றோா் தங்கள் பிள்ளைகளை போதைப் பழக்கத்துக்கு ஆளாக விடக்கூடாது என்று வேலூா் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி அறிவுறுத்தியுள்ளாா். வேலூா் மாவட்டத்தில் உள்ள 247 ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெ... மேலும் பார்க்க