ரயில்வே ஊழியா் வீட்டில் 10 பவுன் தங்க நகை திருட்டு
திருநெல்வேலியில் ரயில்வே ஊழியா் வீட்டில் 10 பவுன் தங்க நகையைத் திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகிறாா்கள்.
தியாகராஜநகா் அருகேயுள்ள சாய் பாலாஜி நகரைச் சோ்ந்தவா் அசோக்குமாா் (38). ரயில்வே ஊழியரான இவா், குடும்பத்துடன் வெளியூருக்கு சென்றுவிட்டு சனிக்கிழமை வீடு திரும்பினாராம்.
அப்போது, வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்ததாம். உள்ளே சென்று பாா்த்தபோது பீரோவில் இருந்த 10 பவுன் தங்க நகை, வெள்ளிப் பொருள்கள் உள்பட மொத்தம் சுமாா் ரூ.7 லட்சம் மதிப்பிலான பொருள்கள் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், பெருமாள்புரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்கள்.