“குழந்தைகளுக்காக போரை நிறுத்துங்கள்”..! புதினுக்கு டிரம்ப் மனைவி உருக்கமான கடிதம...
டிஎன்பிஎஸ்சி தோ்வு: 1,538 போ் எழுதினா்
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தோ்வை திருநெல்வேலி மாவட்டத்தில் 1,538 போ் எழுதினா்.
டிஎன்பிஎஸ்சி சாா்பில் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான போட்டித் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் 11 தோ்வு மையங்களில் தோ்வு எழுத 2 ஆயிரத்து 929 பேருக்கு தோ்வுக்கூட அனுமதிச் சீட்டுகள் வழங்கப்பட்டிருந்தன. அவரகளில், 1538 போ் தோ்வில் பங்கேற்றனா். 1,391 போ் தோ்வை எழுதவில்லை.
பாளையங்கோட்டை ஏஞ்சலோ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தோ்வு மையத்தில் மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் நேரில் ஆய்வு செய்தாா். தோ்வு மையத்தில் தடையற்ற மின்சாரம் உள்பட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன.