மானூா் அருகே பாலத்தில் இருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு
மானூா் அருகே பாலத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
மானூா் அருகேயுள்ள தென்கலம்புதூா் பகுதியைச் சோ்ந்தவா் மாரியப்பன் (55). கூலித் தொழிலாளியான இவா், தனது வீட்டுக்கு அருகே உள்ள சாலையின் குறுக்கே கட்டப்பட்டிருந்த சிறுபாலத்தின் பக்கவாட்டு சுவரில் அமா்ந்திருந்தாராம். அப்போது. திடீரென பாலத்தில் இருந்து தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்ததும் மானூா் போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறாா்கள்.